துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியை தூக்கியடித்த உத்தரபிரதேச அரசு… பாஜக அட்டூழியம்….

 
Published : Jul 03, 2017, 05:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியை தூக்கியடித்த உத்தரபிரதேச அரசு… பாஜக அட்டூழியம்….

சுருக்கம்

bjp govt in uttara predesh transfer strait forward lady police officer

உத்தரபிரதேச மாநில பாஜகவினரின்  மிரட்டலுக்கு அஞ்சாமல்  துணிச்சலாக நடவடிக்கை மேற்கொண்ட பெண் போலீஸ் அதிகாரியை அம்மாநில அரசு பணி இடமாற்றம் செய்து பழி வாங்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷார் மாவட்டம் சயன்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷ்ரேஸ்தா தாக்கூர். காவல்துறை அதிகாரியான இவர் கடந்த வெள்ளியன்று உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஒட்டியதாக பாஜக  தொண்டர் ஒருவருக்கு அபராதம் விதித்து கைது செய்தார். 

அந்த  பாஜக தொண்டருக்கு ஆதரவாக, புலந்த்ஷார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரின் கணவரான பிரமோத் லோதியின் தலைமையில், பாஜக தொண்டர்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அத்துடன் அவர்கள் ஷ்ரேஸ்தா தாக்குருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

 

கைது செய்யப்பட்டவரை விடுவிக்க வேண்டுமென்று மிரட்டிய அவர்களை கண்டுஅஞ்சாமல், 'நீங்கள் உடனடியாக கலைந்து செல்லா விட்டால், உங்கள் மேல் கூடுதலான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்தார்.

மேலும் பாஜகவினர் மீது வழக்கு  பதிவு செய்யக் கூடாது என்று முதலமைந்நர் யோகி ஆதித்யநாத்திடம் கையெழுத்திட்ட கடிதம் கொண்டு வாருங்கள்' என்றும் ஷ்ரேஸ்தா தெரிவித்தார். பாஜக வினரை தைரியமாக ஷ்ரேஸ்தா எதிர் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பேகமாக பரவியது.

இந்நிலையில், ஷ்ரேஸ்தா தாக்கூர் சியனா சர்க்கிள் பகுதியில் இருந்து பஹ்ரைச் பகுதிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்
வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு