மோடி ஆட்சியில் அரங்கேறிய 97 சதவீத தாக்குதல்…..பா.ஜனதா ஆட்சியில் ‘கட்டவிழ்த்து விடப்பட்ட’ பசு பாதுகாவலர்கள்

 
Published : Jul 02, 2017, 10:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
மோடி ஆட்சியில் அரங்கேறிய  97 சதவீத தாக்குதல்…..பா.ஜனதா ஆட்சியில் ‘கட்டவிழ்த்து விடப்பட்ட’ பசு பாதுகாவலர்கள்

சுருக்கம்

terroeism in bjp government by cow gundas

கடந்த 2010 முதல் 2017ம் ஆண்டுவரை நாட்டில் பசு பாதுகாவலர்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 97 சதவீதம் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பே நடந்துள்ளது என்று இந்தியா ஸ்பென்ட் என்று நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி விவகாரம்

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீதும், பசு மாடு இறைச்சி வைத்து இருந்ததாக கூறியும் முஸ்லிம்கள், தலித்துகள் அடித்து கொல்லப்படுவது, தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

2 முறை மட்டுமே கண்டனம்

குறிப்பாக இந்து வலது சாரி அமைப்புகளால் நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் நாடு முழுவதும் அனைத்து கட்சிகளாலும் பெரிய கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. ஆனால்,  இது குறித்து இதுவரை 2 முறை மட்டுமே பிரதமர் மோடி மவுனம் கலைத்து கண்டித்துள்ளார்.

ஆய்வு

இந்நிலையில், ‘இந்தியா ஸ்பென்ட்’ என்ற நிறுவனம் கடந்த 2010 முதல் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நாட்டில் பசு பாதுகாப்பு, மாட்டிறைச்சி தொடர்பாக நடந்த தாக்குதல்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வௌியிட்டுள்ளது.

அதில், கடந்த 8 ஆண்டுகளில் மாட்டிறைச்சி தொடர்பாக நடந்த 63 தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் 51 சதவீத தாக்குதல்கள் முஸ்லிம்களை குறி வைத்தே நடத்தப்பட்டுள்ளன.

இதில் கொல்லப்பட்ட 28 பேரில் 24 பேர் முஸ்லிம்கள், 124 பேர்  காயமடைந்தனர். வீண் வதந்தி காரணமாகவே 52 சதவீத தாக்குதல்கள் நடந்துள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மோடி ஆட்சியில்..

கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதுக்கு பின்புதான்,  பசு பாதுகாவலர்களால் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. ஏறக்குறைய 97 சதவீத தாக்குதல் சம்பவங்கள் மோடி ஆட்சியில்தான் நடந்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் நடந்த 63 தாக்குதல்களில் 61 தாக்குதல்கள் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் நடந்துள்ளவையாகும். இதில் 25 தாக்குதல்கள் 2017ம் ஆண்டில் முதல் 6மாதங்களில் நடந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் 2016ம் ஆண்டு நடந்துள்ளது.

இதில் 63 தாக்குதல்களில் 32 தாக்குதல்கள் பசு மாடு தொடர்பாகவே நடந்துள்ளது. அதிலும் பெரும்பாலான தாக்குதல்கள் பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களிலேயே அதிகமாக நடந்து இருக்கிறது.

2017 மிக மோசம்

  இதில் 2017ம் ஆண்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் மிக மோசமாக 20 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களில் 75 சதவீதம் 2016ம் ஆண்டில் நடந்தவைதான் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

முஸ்லிம்கள் குறிவைப்பு

 முஸ்லிம்கள், தலித்துகள் மீது தாக்குதல்கள், கொலை முயற்சி, கொலை செய்தல், பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பலாத்காரம் ஆகிய சம்பவங்கள் பசு பாதுகாவலர்கள் மூலம் நடத்தப் பட்டவைதான். ேமலும், பசு பாதுகாவலர்கள் அப்பாவி மக்கள் மீது நடத்தும் தாக்குதலின் போது, அவர்களின் உடைமைகளை பறித்தல், நகை, பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

உ.பியில் அதிகம்

இதில் உத்தரப்பிரதேசத்தில் 10 சம்பவங்கள், ஹரியானாவில் 9, குஜராத்தில் 6, கர்நாடகவில் 6, மத்தியப் பிரதேசத்தில் 4 , டெல்லி 4, ராஜஸ்தானில் 4 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த 63 தாக்குதல் சம்பவங்களில் 21 சதவீதம் தென் மாநிலங்கள், கிழக்கு மாநிலங்களில் நடந்துள்லன. தென் மாநிலங்களில் நடந்த 13 சம்பவங்களில் 6 தாக்குதல் சம்பவங்கள் கர்நாடகாவில் நடந்துள்ளன.

பா.ஜனதா ஆளும் மாநிலங்கள்

63 தாக்குதல்களில் பாதிக்கு மேல், அதாவது 32 சம்பவங்கள் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாவலர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 8 சம்பவங்களும், இதர கட்சிகளின் ஆட்சியில் மற்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியிலும் அதிகமாக நடந்துள்ளது.

தலித்துகள் மீது

இந்த 63 தாக்குதல்களில் 8 சதவீதம் தலித்துகள் மாட்டிறைச்சி வைத்து இருந்ததாகவும், பசு இறைச்சி சாப்பிட்டதாகவும், தோல் முதலிய பொருட்களை வைத்திருந்ததாகவும் நடத்தப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம்கள் மீது பாதிக்கும்மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இது வரை

இதுவரை பசுபாதுகாவலர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 5 சதவீதம் தாக்குதல்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. 13 சதவீத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் 23 தாக்குதல்களில் ஈடுபட்ட கும்பல்கள், மக்களை விசாரணை நடத்தியதில் அவை இந்து வலது சாரி அமைப்புகள் எனத் தெரியவந்துள்ளது. அதாவது, விஸ்வஇந்து பரிசத், பஜ்ரங் தள் மற்றும் பசுபாதுகாப்பு இயக்கங்களாகும்.

 

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்
வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு