
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் நடந்தது.
ராகுல் காந்திக்கு சிஆர்பிஎப் வீரர்கள் அளித்த பாதுகாப்பு வளையத்தை மீறிய ஒரு இளைஞர்கள் வேகமாக ஓடி வந்து ராகுல் காந்தியை கட்டி அணைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவை பொருளாதார மந்தநிலை தாக்கும்.. மத்திய அமைச்சர் நாராயண் ரானே தகவல்!
பஞ்சாப்பின் ஹோசியார்பூர் தண்டா நகரில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை இன்று தொடங்கினார். ராகுல் காந்தியின் இன்றைய யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், மாநிலத் தலைவரான அமரிந்தர் சிங் ராஜா வாரிங், ஹரிஷ் சவுத்ரி, ராஜ் குமார் சாபிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, ராகுல் காந்தி சாலையில் நடந்து வந்தபோது, மஞ்சள் நிற கோட் அணிந்த ஒரு இளைஞர் திடீரென சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து ராகுல் காந்தியை கட்டிப்பிடித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ராகுல்காந்தி அந்த இளைஞர் பிடியிலிருந்து விடுபட முயன்றார். அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள், காங்கிரஸ் நிர்வாகிள், அந்த இளைஞரைப் பிடித்து இழுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி நகருக்குள் வந்தபோது பாதுகாப்பை சரிவர போலீஸாரும், சிஆர்பிஎப் வீரர்களும் வழங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி இருந்தது.
இனி எந்தத் தேர்தலிலும் தோற்கக் கூடாது: பாஜக தலைவர் நட்டா உறுதி
ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளித்துவரும் சிஆர்பிஎப் இசட்பிளஸ் பிரிவு பாதுகாப்பி்ல் குளறுபடிகள் நடப்பதாக காங்கிரஸ் சார்பில் கூறப்பட்ட புகாருக்கு சிஆர்பிஎப் சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி 200க்கும் மேற்பட்ட முறை பாதுகாப்பு விதிகளை மீறியதாக சிஆர்பிஎப் பதில்அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.