பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பல் தரை தட்டி நின்றுவிட்டது என்று செய்தி வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை சுற்றுலா கப்பல் இயக்கப்படுகிறது.
கங்கா விலாஸ் எனப்படும் இந்த சொகுசு கப்பல் பல்வேறு வசதிகளை கொண்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் பல்வேறு நதிகள் வழியாக செல்லும் இந்தக் கப்பலை பிரதமர் மோடி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். உலகின் மிகப்பெரிய ஆற்று வழி சொகுசு கப்பல் திட்டமாக இந்த கங்கா விலாஸ் பெயர் பெற்றுள்ளது.
இதையும் படிங்க..குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்.. ஸ்டாலின் ஸ்டைலில் பிரியங்கா காந்தி அறிவிப்பு! பெண்கள் குஷி!
51 நாட்கள் 3200 கி.மீ. தூரம் உள்நாட்டு நீர்வழி தடத்தில் பயணம் செய்யும் இந்த கப்பல் உலகின் மிக நீண்ட உள்நாட்டு நீர்வழி சொகுசு கப்பல் என்று வர்ணிக்கப்பட்டது. 68 கோடி ரூபாய் செலவில் 62 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள மிதக்கும் ஐந்து நட்சத்திர விடுதியாக கங்கா விலாஸ் சொகுசு கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு முழு பயணத்திற்கு ரூ. 20 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கப்பலில் 39 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த நிலையில் பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது. கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க..நான் பைத்தியமா? Y பிரிவு பாதுகாப்பு போதாதா.? அண்ணாமலைக்கு சவால்விட்ட காயத்ரி ரகுராம்!
அவர்கள் தொல்லியல் தளமான சிராந்த் சரண் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்றும், அவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியது. இது பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி, கங்கா விலாஸ் சொகுசு கப்பல் கால அட்டவணையின்படி பாட்னாவை அடைந்தது. கப்பல் தரை தட்டி நின்றதாக வெளியான செய்தியில் முற்றிலும் உண்மை இல்லை. அட்டவணைப்படி கப்பல் அதன் பயணத்தைத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ஆசையாக பெரியப்பா மு.க அழகிரி வீட்டுக்கு போன உதயநிதி! மதுரையில் திடீர் சந்திப்பு.. குஷியில் உடன்பிறப்புகள் !!