400 ஆண்டுகால சாபம் முடிந்தது! மைசூரு அரண்மனைக்கு ஆண் வாரிசு பிறந்தது! கொண்டாட்டத்தில் மன்னர் குடும்பம்!

First Published Dec 7, 2017, 3:44 PM IST
Highlights
A male heir was born in the family of Mysore


மைசூரு மன்னர் குடும்பத்தில் புதிதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் காரணமாக உடையார் குடும்பத்தின் மீதிருந்த 400 ஆண்டுகால சாபம் விலகியதாக கூறப்படுகிறது.

1612 ஆம் ஆண்டு மைசூரை, விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த திருமலைராஜாவிடம் இருந்து, ராஜா உடையார் என்பவர் கைப்பற்றினார். அப்போது, திருமலைராஜாவின் மனைவி, அலமேலம்மா, தப்பித்து, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக அலமேலம்மா, உடையார் பரம்பரைக்கு ஒரு சாபத்தை அளித்துவிட்டு மாண்டுபோனார். தலக்காடு மண்ணாகப் போகட்டும்... காவிரியில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும்... மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும் என்பதுதான் அவரது சாபம். அலமேலம்மாவின் இந்த சாபத்தால்தான், மைசூர் உடையார் மன்னரின் குடும்பத்தில் வாரிசு சிக்கல் இருந்து வருவதாக நம்பப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றபோது, மைசூர் மாகாண மன்னராக இருந்தவர் ஜெயசாமராஜேந்திர உடையார். இவருக்கு வாரிசு இல்லாததால், கண்டதத்த நரசிம்ம உடையாரை தமது மகனாக தத்தெடுத்தார். அவர், 1974 ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். கந்ததத்தா நரசிம்மராஜா உடையார் கடந்த 2013 ஆம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. எனவே அவரது மூத்த சகோதரி காயத்ரி தேவியின் பேரன் யதுவீர கோபாலராஜே அர்ஸ் (23) என்வர் அடுத்த வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மைசூரின் 27-வது மன்னராக முடிசூட்டப்ட்ட அவருக்கு யதவீர கிருஷ்ணதத்தா சாம்ராஜ் உடையார் என புதிய பெயர் சூட்டப்பட்டது. யதுவீர கிருஷ்ணதத்தா சாம்ராஜ் உடையாருக்கும், ராஜ்காட் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த திரிஷாதேவி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில், திரிஷா தேவிக்கு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை
பிறந்துள்ளது. இதன் மூலம் மன்னர்குடும்பத்தின் மீதான 400 ஆண்டுகால சாபம் முடிவுக்கு வந்துள்ளது.

மைசூர் மன்னர் குடும்பத்தில், ஆண் குழந்தை பிறந்ததன் காரணமாக அந்த குடும்பமே சந்தோஷத்தில் திளைத்துள்ளது. ஆண் வாரிசு பிறந்ததை, அந்த குடும்பமே தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.

click me!