kerala judge: அரைகுறை ஆடை பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமில்லை: சர்ச்சைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இடமாற்றம்

By Pothy Raj  |  First Published Aug 24, 2022, 12:50 PM IST

அரைகுறை ஆடை அணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது குற்றமாகாது என்று சமீபத்தில் சர்சசைக்குரிய தீர்ப்பளித்த கோழிக்கோடு மாவட்ட செசென்ஸ் நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.


அரைகுறை ஆடை அணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது குற்றமாகாது என்று சமீபத்தில் சர்சசைக்குரிய தீர்ப்பளித்த கோழிக்கோடு மாவட்ட செசென்ஸ் நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் எழுத்தாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி நந்தி கடற்கரையில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என ஒரு பெண் புகார் அளித்தார். அந்த பெண்ணும் ஒரு எழுத்தாளர்.

Tap to resize

Latest Videos

பீகார் முதல்வர் நிதிஷுக்கு நெருக்கடி! ஆர்ஜேடி தலைவர்கள் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை

 இவரின் புகாரின் அடிப்படையில் சந்திரனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சந்திரன் கோழிக்கோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் கோழிக்கோடு மாவட்ட நீதிபதி கிருஷ்ணகுமார் கடந்த 12ம் தேதி வழங்கிய தீர்ப்பில் “ மனுதாரர் 74வயதுள்ள, மாற்றுத்திறனாளி. அவர் வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்பதை நம்பமுடியவில்லை.

என்டிடிவி ஒப்புதல் இல்லாமல் 29% பங்குகளை வாங்கிய அதானி குழுமம் : விவரம் என்ன?

அதுமட்டுமல்லாமல் புகார்தாரரான அந்தப்பெண், தனது உடல் உறுப்புகள் தெரியும் வகையில் அரைகுறை ஆடை அணிந்திருந்தார் இது பாலியல் உணர்ச்சியை தூண்டும் விதத்தில் இருக்கிறது. அரைகுறை ஆடை அணிந்த பெண்ணிடம் பாலியல்சீண்டல் குற்றமில்லை” எனக் கூறி சந்திரனுக்கு ஜாமீன் வழங்கினார்.

மற்றொரு வழக்கிலும் சிவிக் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கியதும் நீதிபதி கிருஷ்ணகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் தனக்கு சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் கடந்த 2ம் தேதிஅளித்த தீர்ப்பில், “ சந்திரன் சாதிகளுக்கு எதிராக இருப்பவர், புரட்சியாளர். அவர் எப்படி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் எனத் தெரிந்தும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்பது நம்பமுடியவில்லை எனக் கூறி ஜாமீன் வழங்கினார்.

ஆனால், செசென்ஸ் நீதிமன்றம் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கியதை  எதிர்த்து கேரள அரசு,  உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

பாஜக அதிரடி ! தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி. ராஜா சிங் சஸ்பெண்ட்

இரு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய மாவட்ட செசென்ஸ் நீதிபதி எஸ். கிருஷ்ணகுமார் கோழிக்கோடு நீதிமன்றத்திலிருந்து கொல்லத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளஆர். கொல்லத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


 

click me!