மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு போலியான வீடியோவால் தூண்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மே மாத தொடக்கத்தில் இனக்கலவரம் வெடித்தபோது, இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியிருக்கும் சூழலில், அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு போலியான வீடியோவால் தூண்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையினரான மெய்தீ சமூகத்தினருக்கும் மலைப்பகுதிகளில் வசிக்குமு் குக்கி பழங்குடியி மக்களுக்கும் இடையே மே 3ஆம் தேதி முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. மெய்தீ சமூகத்தினர் தங்களுக்உக பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். குக்கி சமூகத்தினர் அதனை எதிர்க்கின்றனர்
மெய்தீ சமூகத்திற்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்து குக்கி பழங் குடியினர் ஒற்றுமை பேரணி நடத்திபோது வன்முறை தொடங்கியது. இ ரண்டு சமூகங் களுக்கிடையில் தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்கள் அதிகரித்த சூழலில்,மே 4ஆம் தேதி ஒரு கும்பல், அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வதந்தியை நம்பி, பழிதீர்க்கும் செயலில் இறங்கியுள்ளது.
மணிப்பூர் சம்பவத்தில் பெண்ணை பிடித்து இழுத்து சென்ற பச்சை சட்டை அணிந்து இருந்த முக்கிய குற்றவாளி இன்று காலை கைது செய்யப்பட்டார். அவர் பெயர் ஹுரெம் ஹீரோடஸ் மெய்தி என்பதும், வயது 32 வயது என்பதும், இவரது தந்தை ஹெச். ராஜென் மெய்தி என்பதும் தெரிய வந்துள்ளது. … pic.twitter.com/tfb0hjRjrn
— Asianetnews Tamil (@AsianetNewsTM)அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு கிராமத்தில் புகுந்த இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களை தங்கள் பிடியில் இழுத்துச் சென்றுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 56 வயது நபர், அவரது 19 வயது மகன் மற்றும் 21 வயது மகள் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களுடன் மேலும் இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு 42 வயது, மற்றொருவருக்கு 52 வயது.
இந்த கும்பல் காவல் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இருந்தபோது, போலீசாரின் பிடியில் சிக்காமல் நழுவிச் சென்றுள்ளது. அந்த கும்பலிடம் இருந்து தனது 21 வயது சகோதரியை காப்பாற்ற முயன்ற 19 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போலீசில் அளித்த புகாரின் மூலம் கும்பலால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. புகாரின் அடிப்படையில், மே 18 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு மே 21 அன்று சம்பவம் நடந்த பகுதியில் உள்ள நோக்போக் செக்மாய் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
குஜராத்தில் 160 கி.மீ. வேகத்தில் சீறி பாய்ந்த சொகுசு கார்; 9 பேர் பரிதாப பலி
மே 3 முதல் மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை வெளியான வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக பரவி வைரலானது. நாட்டையே தலைகுனிய வைக்கும் இந்தச் சம்பவம் நடந்து 77 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, வீடியோவில் காணப்பட்ட குற்றவாளி களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ள மணிப்பூர் காவல்துறை அவரது புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
32 வயதான அந்த அந்த நபர் ராஜன் மெய்தியின் மகன் ஹுரெம் ஹீரோதாஸ் மெய்தி என்றும் சம்பவம் நடந்தபோது அவர் பச்சை சட்டை அணிந்திருந்தார் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகளுடன் மற்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 12 குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது.
தண்ணீர் வழங்கல் மாநில அரசின் அதிகாரம்: ரவிக்குமார் எம்.பி., கேள்விக்கு மத்திய அரசு பதில்!