Pune Google Office: புனே கூகுள் நிறுவன அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

By Pothy Raj  |  First Published Feb 13, 2023, 1:29 PM IST

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கூகுள் நிறுவனத்துக்கு தொலைப்பேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கூகுள் நிறுவனத்துக்கு தொலைப்பேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்தத் தொலைப்பேசி அழைப்பு ஏமாற்றுவேலை என்பது தெரியவந்தது. தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்தவரை போலீஸார் ஹைதராபாத்தில் கைது செய்தனர். அவர் மனநிலை சரியில்லாத நபர் என்பது பின்னர் தெரியவந்தது.

Tap to resize

Latest Videos

மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு 7.54 மணிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், புனேயில் உள்ள கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்தார். 

ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு பயணம்: பழங்குடியினர் வீட்டுக்கு சென்றார்

புனேயில் உள்ள முந்த்வா பகுதியில் பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் 11-வது மாடியில் கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது. இதையடுத்து, மும்பையில் உள்ள கூகுள் நிறுவன அதிகாரிகள் உடனடியாக மும்பை பெருநகர போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்து அந்த தொலைப்பேசி அழைப்பை கண்காணித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், புனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்து தகவல்களைப் பரிமாறினர். புனே போலீஸாரின் வெடிகுண்டு செயல்இழப்பு பிரிவு, மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு கூகுள் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தச் சோதனையில் கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இது குறித்து புனே துணை போலீஸ் ஆணையர் விக்ரந்த் தேஷ்முக் கூறுகையில் “ புனே கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு செயல்இழப்பு பிரிவு, மோப்பநாய் ஆகியவற்றுடன் சென்று ஆய்வு செய்தோம். வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அழைப்பு போலியானது என்பது தெரியவந்தது. அழைப்பு செய்தவர் குறித்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அது ஹைதராபாத் என்பது தெரியவந்தது.

மோடியின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றியதே பால் தாக்ரேதான்! உத்தவ் தாக்கரே பாய்ச்சல்

அந்த எண்ணுக்குரிய முகவரியை தொடர்பு கொண்டபோது, அந்த அழைப்பு செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஹைதராபாத் போலீஸாருடன் இணைந்து புனே போலீஸாரும் ஈடுபட்டு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்

click me!