டெல்லியில் பிரதமர் மோடி வீடு அமைந்துள்ள பகுதிகளில் இன்று சந்தேகத்திற்கிடமான வகையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு நிலவியது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு மேலே, இன்று அதிகாலை ஆளில்லா விமானம் பறந்ததாக வெளியான தகவலை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் இல்லத்தின் மீது அதிகாலை 5 மணியளவில் ஆளில்லா விமானம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி போலீசார் ட்ரோனைக் கண்காணிக்க தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இருப்பினும், போலீசார் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளால் இதுவரை சந்தேகத்திற்குரிய எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்ப நிலைமை சரியில்ல... பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு; காரணம் என்ன?
இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் " பிரதமரின் இல்லத்திற்கு அருகே, ஆளில்லா விமானம் பறக்கவிடப்பட்டதாக தகவல் கிடைத்தது. பிரதமரின் சிறப்பு காவல் அதிகாரி, அதிகாலை 5:30 மணிக்கு காவல்துறையை தொடர்பு கொண்டார். விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் இல்லத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் முழுமையான தேடுதல் நடத்தப்பட்டது,
ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையை (ATC) தொடர்பு கொண்டாலும், பிரதமர் இல்லத்திற்கு அருகில் பறக்கும் பொருள் எதையும் அவர்களால் கண்டறிய முடியவில்லை. எனினும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணை நிறைவடைந்த பிறகே, முழு விவரம் தெரியவரும் " என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகயில், இன்று அதிகாலை ட்ரோன் பறந்தால் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த மாநிலத்தில் திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம்.. விரைவில் புதிய திட்டம்.. முதலமைச்சர் அறிவிப்பு