பெங்களூருவில் நடைபெறவிருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் மாற்றுத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் கே. சி. தியாகி ஞாயிற்றுக்கிழமை கூறினார்,."நம்பிக்கையுடன், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு கூட்டப்படும்" என்றார். இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
undefined
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பீகார் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை 10 முதல் 14 வரை) மற்றும் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை 3 முதல் 14 வரை) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெங்களூரு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மணிப்பூரில் விடிய விடிய நடந்த சண்டை! 3 பேர் சுட்டுக்கொலை... ஒருவர் தலை துண்டிப்பு
பீகாரின் இரண்டு முன்னணி எதிர்க்கட்சிகளான ஆர்ஜேடி மற்றும் ஜேடி(யு) ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களான முதல்வர் நிதிஷ் குமாரும் அவரது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் பெங்களூரு கூட்டத்தை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பெங்களூருவில் கூட்டத்தை நடத்தவிருந்த கர்நாடக காங்கிரஸ், கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரை கருத்தில் கொண்டு கூட்டத்தை ஒத்திவைக்குமாறு தலைமையை வலியுறுத்தியதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதவிர தமிழ்நாட்டில் தற்போது மேகதாது அணை விவகாரம் சூடு பிடித்துள்ள சூழலில், திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்று கூட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் உள்ளது. ஏற்கெனவே பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஸ்டாலின் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பினால், அவரை தமிழ்நாட்டிற்குள் விடமாட்டோம் என்று பேசியுள்ளார். தமிழகத்திற்கு திரும்புவதைத் எதிர்த்து Go Back Stalin போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் திமுக தரப்பிலும் தேதியையும் இடத்தையும் மாற்றக் கோரியதாகவும் ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரிலோ இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவிலோ கூட்டத்தை நடத்தலாப் என்றும் திமுக சார்பில் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் கைகோர்த்த என்சிபி தலைவருக்கு பதவியா? பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
முன்னதாக வியாழக்கிழமை, என்சிபி தலைவர் சரத் பவார் கூட்டம் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சிம்லாவுக்கு பதிலாக பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவித்தார். "இமாச்சலப் பிரதேசத்தில் நிலவும் வானிலை மற்றும் கனமழை காரணமாக, கூட்டத்தின் இடம் சிம்லாவிலிருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது" என்றும் அஜித் பவார் கூறி இருந்தார்.
அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நாட்களில், திங்கட்கிழமை என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் அவரது கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவார் கட்சி தன்வசம் வந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளார். இந்தத் திடீர் திருப்பம் அவரது கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் முயற்சிக்கும் பின்னடைவாக மாறியுள்ளது. இதுவும் பெங்களூரு கூட்டம் ஒத்திவைப்புக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
துரோகம் செய்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மனுத்தாக்கல்: என்சிபி தலைவர் ஜெயந்த் பாட்டீல்