பாஜகவுடன் கைகோர்த்த என்சிபி தலைவருக்கு பதவியா? பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

By SG Balan  |  First Published Jul 3, 2023, 8:56 AM IST

என்சிபியில் இருந்து விலகிய பிரஃபுல் பேடல், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இருவரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.


மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்துவது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சுக்கு மத்தியில், இந்தக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது.

புதிதாக கட்டப்பட்ட மாநாட்டு மையத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, திங்கட்கிழமை தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவாரின் ஆதரவாளரான பிரஃபுல் பேடல் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருக்கும் பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் மத்திய அமைச்சரவை சேர்க்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த மாநிலத்தில் திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம்.. விரைவில் புதிய திட்டம்.. முதலமைச்சர் அறிவிப்பு

ஏற்கெனவே கடந்த வாரம் புதன்கிழமை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கு கட்சியைத் தயார் செய்வது குறித்துப் பேசப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக, அமித் ஷா, கே.பி.நட்டா மற்றும் பாஜக பொதுச் செயலாளர் பி. எல். சந்தோஷ் ஆகியோர் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்து பல சுற்று ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.

இந்த 10 மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இருப்பினும், மே மாதம், மோடி அரசாங்கம் கிரண் ரிஜிஜூவை சட்ட அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக அர்ஜுன் ராம் மேக்வாலை நியமித்தது.

ஜூலை 2021 இல், மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெரிய மாற்றங்கள் இருந்தன. 12 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். முந்தைய மாற்றத்தின்போது, ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மற்றும் சந்தோஷ் கங்வார் போன்ற அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். ஜோதிராதித்ய சிந்தியா, நாராயண் ரானே, சர்பானந்தா சோனோவால் மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் போன்ற புதியவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.

மணிப்பூரில் விடிய விடிய நடந்த சண்டை! 3 பேர் சுட்டுக்கொலை... ஒருவர் தலை துண்டிப்பு

click me!