கொரோனா காலத்தில் பீகார் தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த டெல்லி விவசாயி தற்கொலை

By Pothy RajFirst Published Aug 24, 2022, 4:57 PM IST
Highlights

நாட்டில் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் பீகார் தொழிலாளர்களை விமானத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்து அனுப்பி வைத்த டெல்லி விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் பீகார் தொழிலாளர்களை விமானத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்து அனுப்பி வைத்த டெல்லி விவசாயி பப்பன் சிங் கெலாட் தற்கொலை செய்து கொண்டார்.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை... இது மனித குலத்திற்கே அவமானம் என கொதித்தெழுந்த குஷ்பு

டெல்லியின் வடக்குப்பகுதியில் உள்ள திகி புர் கிராமத்தைச் சேர்ந்தவர்  பப்பன் சிங் கெலாட். இவர் விவசாயம் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, பசுவுடன் உடலுறவு.. தலையில் அடித்து தூக்கிச் சென்ற போலீல்.. நாயுடனும் உல்லாசம்.

இதைப் பார்த்த விவசாயி பப்பன் சிங் கெலாட் தன்னால் முடிந்த அளவுக்கு பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் விமானத்தில் சொந்த ஊர் செல்வதற்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து வழியனுப்பி வைத்தார். அப்போது பப்பன் சிங் கெலாட்டின் செயல் சமூக வலைத்தளத்தில் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், பப்பன் சிங் கெலாட் தனது இல்லத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். பபன் கெலாட்டின் தற்கொலைக்கு அவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் இந்த துயர முடிவை எடுத்ததாக தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பப்பன் கெலாட்டுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.  இதையடுத்து, பபன் கெலாட் உடலை போலீஸார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

aap: modi:ரூ.20 கோடி தர்றோம்..! இந்த பக்கம் வாங்க! எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை: அம்பலப்படுத்திய ஆம் ஆத்மி

பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வானொலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கொரோனா காலத்தில் பீகார் தொழிலாளர்கள் எவ்வாறுடெல்லியை விட்டு செல்வதற்கு பப்பன் சிங் கெலாட் உதவினார் என்பதை விளக்கமாகத் தெரிவித்தார். பீகார் தொழிலாளர்களை சிறப்பு ஷராமிக் ரயிலில் அனுப்பி வைக்க பலமுறை முயன்றார் ஆனால் முடியவில்லை என்றும் மாதுரி குறிப்பிட்டார்
 

click me!