பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு

Asianet News Tamil  
Published : Mar 21, 2017, 11:23 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு  90 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு

சுருக்கம்

90 days leave for sexually abused women

பணியிடங்களில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி புகார் அளிக்கும் மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு, விசாரணை முடியும் வரை 90 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை சட்டத்தில் இதில் வகைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் புகார் கொடுத்த பெண் மிரட்டல், தாக்குதல் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க முடியும்.

பாலியல் புகார் கொடுத்தபின், அந்த புகார் குறித்து விசாரிக்கும் குழுவால், இந்த விடுப்பை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க பரிந்துரை செய்ய இயலும். பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு வழங்கப்படும் இந்த விடுப்பு, அவரின் பணிக்காலத்தில் வழங்கப்படும் விடுப்பில் இருந்து கழிக்கப்படாது என்று மத்திய பணியாளர் பயிற்சி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்களில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால், நிர்வாகம் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் பணியாளர்பயிற்சி துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

அதில் பாலியல் புகார் கொடுக்கும் பெண் ஊழியரின் புகாரை 30 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும், தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும் பட்ச்தில் மட்டுமே90 நாட்கள் எடுத்துக் கொண்டு விசாரிணையை முடிக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தது.

பெண் ஊழியர் புகார் கொடுக்கிறார் என்பதால், அவர் எந்த விதத்திலும் பழிவாங்கப்பட்டுவிடாமல், அமைச்சகங்கங்கள், துறைகளும் தீவிரமாக பாதிக்கப்பட்ட பெண்ணை கண்காணிக்க வேண்டும். 

அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் மாதந்தோறும், பெண் ஊழியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து அறிக்கையை குழந்தைகள் மற்றும் மகளிர் ேமம்பாட்டு துறை அமைச்சகத்திடம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பீர் -ஒயின் பிரியர்களுக்கு ஜாக்பாட்..! இனி 90% வரை மலிவாக கிடைக்கும்..!
நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!