மல்லிகார்ஜுன கார்கே மகன் உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. புதிய அமைச்சர்கள் யார் யார்?

Published : May 20, 2023, 01:46 PM ISTUpdated : May 20, 2023, 04:37 PM IST
மல்லிகார்ஜுன கார்கே மகன் உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. புதிய அமைச்சர்கள் யார் யார்?

சுருக்கம்

கர்நாடக அமைச்சரவையில் எம்பி பாட்டீல், பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

கர்நாடக தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் 2-வது முறையாக சித்தராமையா முதலமைச்சராகி உள்ளார். அவரை தொடர்ந்து  துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதன்படி கர்நாடக அமைச்சரவையில் முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வரா, எம்எல்ஏக்கள் எம்பி பாட்டீல், பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

கர்நாடகா அமைச்சர்கள் பட்டியல்:

  • ஜி. பரமேஸ்வரா 
  • பிரியங்க் கார்கே (மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்)
  • சதீஷ் ஜர்கிஹோலி
  • ராமலிங்க ரெட்டி
  • எம்பி பாட்டீல்
  • கேஹெச் முனியப்பா
  • கேஜெ ஜார்ஜ்
  • ஸமீர் அகமது கான்

🇮🇳 pic.twitter.com/9dUey2AScE

— Congress (@INCIndia) May 20, 2023

இந்த விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,  பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஃபரூக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, விசிக தலைவர் திருமாவளவன, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : Breaking : 2-வது முறையாக கர்நாடக முதலமைச்சரானார் சித்தராமையா.. டி.கே சிவகுமார் துணை முதல்வராக பதவியேற்பு

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!