பள்ளி வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உள்ளது.
திரிணாமுல் தலைவரும் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி, இன்று காலை சிபிஐயின் கொல்கத்தா அலுவலகத்தில் ஆஜரானார், அங்கு அவர் பள்ளி வேலை வாய்ப்பு ஊழல் தொடர்பான ஏஜென்சியின் விசாரணையின் ஒரு பகுதியாக அழைக்கப்பட்டார்.
அபிஷேக் பானர்ஜி இன்று காலை 10:58 மணியளவில் நிஜாமில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வந்து, வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றார். பள்ளி வேலை வாய்ப்பு ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் சுஜய் கிருஷ்ண பத்ராவின் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தியதாக மத்திய ஏஜென்சியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
undefined
மேற்கு வங்கத்தில் அரசு நடத்தும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோதமான முறையில் நியமனம் செய்யப்பட்டதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மார்ச் 15 அன்று பத்ரா சிபிஐ முன் ஆஜரானார். இதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வரும் நிலையில், பள்ளிகளில் ஆட்சேர்ப்பில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள பணப் பரிவர்த்தனையை அமலாக்கததுறை ஆராய்ந்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், மத்திய புலனாய்வு அமைப்பு அனுப்பிய சம்மனுக்கு பதிலளிக்க வெள்ளிக்கிழமை இரவு கொல்கத்தாவுக்கு விரைந்தார். "சனிக்கிழமை காலை 11 மணிக்கு என் முன் ஆஜராகுமாறு இதன்மூலம் உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் அபிஷேக் பானர்ஜியின் ஹரிஷ் முகர்ஜி சாலை முகவரிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..வெப்பத்தை போக்க வருகிறார் வருண பகவான்.! தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?
கடந்த வியாழன் அன்று, கல்கத்தா உயர் நீதிமன்றம், ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழலில் சிபிஐ மற்றும் இடி போன்ற புலனாய்வு அமைப்புகள் அவரை விசாரிக்கலாம் என்று நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை திரும்பப் பெறக் கோரி அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குண்டல் கோஷ் என்பவர் தாக்கல் செய்த புகாரில் டிஎம்சி தலைவரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
பள்ளி ஊழல் வழக்கில் அபிஷேக் பானர்ஜியின் பெயரைக் குறிப்பிடுமாறு மத்திய புலனாய்வு அமைப்புகளால் தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக கோஷ் குற்றம் சாட்டினார். திங்கள்கிழமை முதல் அமர்விருக்கும் உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..2000 ரூபாய் நோட்டு: சீறிய முதல்வர் ஸ்டாலின்.! திமுகவினரின் சாராய ஆலை விவகாரத்தை தூசி தட்டும் அண்ணாமலை