புதுவையில் தாய் திட்டியதால் நெயில் பாலிஷ் குடித்த 7ம் வகுப்பு பள்ளி மாணவி பலி!

By Dinesh TGFirst Published Oct 15, 2022, 6:51 PM IST
Highlights

புதுச்சேரியில் சகோதரிகள் சண்டை தாய் திட்டியதால் தாயிடம் கோபித்துக்கொண்ட 7-ம் வகுப்பு படிக்கும் மகள் பள்ளி வகுப்பறையில் நெயில் பாலிஷ் மற்றும் அதனை ரிமூவ் செய்யும் தின்னரை குடித்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடியை சேர்ந்தவர் கணிமொழி, இவர் அபிஷேகப்பாகம் அம்பேத்கர் வீதியை சேர்ந்த பிரஷ்னேவ் என்ற ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக கனிமொழி நெட்டப்பாக்கம் இந்திரா நகர் இரண்டாவது குறுக்கு தெருவில் குடியிருந்து வருகிறார்.

மேலும் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணி செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை இவரது மூத்த மகளுக்கும், 2 வது மகளுக்கும் பள்ளிக்கு கிளம்பும்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தாய் கனிமொழி இருவரையும் கண்டித்து சமாதானம் செய்துள்ளார்.

அதிர்ச்சி!! தண்ணீர் பாட்டிலில் இறந்த கிடந்த பல்லி.. அதிச்சியடைந்த வாடிக்கையாளர்.. வீடியோ வைரல்

இதில் ஸ்ரீமதி மட்டும் தாய் கனிமொழியிடம் பேசாமல் கோபத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அபிஷேகபாக்கத்தில் உள்ள சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஸ்ரீமதி உள்பட மூன்று மகள்களையும் பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார். ஸ்ரீமதி அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது ஸ்ரீமதி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

ஸ்ரீமதியின் தோழிகள் உதவியோடு பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் ஶ்ரீமதி பள்ளியின் மதிய உணவு இடைவேளியின் போது நெயில் பாலீஷ் மற்றும் அதனை ரிமூவ் செய்யும் தின்னரை குடித்தாக தெரியவந்தது.

Watch : புதுவையில் செல்போன் கடையில் புதிய வகை மோசடி; கையும் களவுமாக பிடித்த கடைக்காரர்!!

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீமதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாய் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் காவல்துறையினர்விசாரனை நடத்தி வருகின்றனர்.

click me!