தோளில் சுமந்து தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. கேரளா அருகே நெகிழ்ச்சி

Published : Oct 15, 2022, 05:25 PM IST
தோளில் சுமந்து தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. கேரளா அருகே நெகிழ்ச்சி

சுருக்கம்

தனது தாயின் வாழ்நாள் ஆசையான நீலக்குறிஞ்சி மலர் பூப்பதை காண்பிக்க, தோளில் சுமார் 1.5 கி.மீ சுமந்து தூக்கி சென்று, அதனை நிறைவேற்றியுள்ளார் அவரது மகன்கள்.. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 87 வயதாகும் எலிக்குட்டி பால்  ( Elikutty Paul) எனும் மூதாட்டிக்கு  நீலக்குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருந்துள்ளது.

இதனை அறிந்த அவரது மகன்களான ரோஜன் மற்றும் சுந்தரம் ஒரு திட்டம் போட்டுள்ளார். அதன் படி, தனது தாயாரின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.

மேலும் படிக்க:Pm Narendra modi: நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமே மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்: பிரதமர் மோடி வேதனை

அதன்படி தங்களது வீட்டிலிருந்து இடுக்கி மாவட்ட கள்ளிப்பாறைக்கு ஜீப் மூலம் சென்ற அவர்கள், அங்கிருந்து மேலே சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு தனது தாயாரை தோளில் சுமந்து சென்றுள்ளனர். 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் அரிய வகை மலரான நீலக்குறிஞ்சியை கண்டு களித்தார் முதாட்டி. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:அதிர்ச்சி!! ஆசிரியர் ஆடையை கழற்ற சொன்னதாக கூறப்படும் சம்பவம் .. அவமானம் தாங்காமல் தீக்குளித்த மாணவி..

PREV
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!