மீண்டும் பாஜக ஆட்சி... மோடி 3வது முறை பிரதமராக 64% பேர் விருப்பம்: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்

By SG Balan  |  First Published Apr 16, 2024, 8:36 PM IST

புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் மார்ச் இறுதியில் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் வெளியிட்ட மூட் ஆஃப் தி நேஷன் டிஜிட்டல் சர்வேயின் முடிவுகளைப் மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளன.


2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று 63 சதவீதம் பேர் நம்புகின்றனர் என புதிய ஆன்லைன் சர்வே கணித்துள்ளது. TV9 மற்றும் Dailyhunt ஆகியவற்றின் டிரஸ்ட் ஆஃப் தி நேஷன் 2024 கணக்கெடுப்பின் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.

இந்தப் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் மார்ச் இறுதியில் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் வெளியிட்ட மூட் ஆஃப் தி நேஷன் டிஜிட்டல் சர்வேயின் முடிவுகளைப் மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளன.

Latest Videos

undefined

அந்த விரிவான ஆன்லைன் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 61% பேர் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் திருப்தி அடைந்திருப்பதாகக் கூறினர். நாடு முழுவதும் 77 லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களிடம் நடத்திய இந்தக் கணக்கெடுப்பு, ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்த பொதுமக்களின் கருத்தைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்குவது கிரிமினல் குற்றம்! பிரிட்டனில் அதிரடி சட்டம்!

TV9 மற்றும் Dailyhunt இணைந்து நடத்திய டிரஸ்ட் ஆஃப் தி நேஷன் 2024 கணக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து முக்கிய அம்சங்கள்:

* பதிலளித்தவர்களில் 64% பேர் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகத் தொடர்வதை ஆதரிப்பதாகவும் 21.8% பேர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

* 63% பேர் வரும் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள்.

* டெல்லியில் மோடி 57.7% வாக்குகள் பெற்று முன்னிலையிலும், ராகுல் காந்தி 24.2% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

* உத்தரபிரதேசத்தில் 78.2% ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். ராகுல் காந்திக்கு 10% ஆதரவு கிடைத்துள்ளது.

* மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி 62.6% ஆதரவுடன் முன்னிலையில் உள்ளார். ராகுல் காந்தி 19.6% ஆதரவைப் பெற்றுள்ளார்.

* தமிழகத்தில் ராகுல் காந்தி 44.1% ஆதரவைப் பெற்ற முன்னிலை வகிக்கிறார். பிரதமர் மோடி 43.2% ஆதரவு பெற்றுள்ளார்.

* கேரளாவில் பிரதமர் மோடிக்கு 40.8% மற்றும் ராகுல் காந்திக்கு 40.5% என நெருக்கமான போட்டி நிலவுகிறது.

* தெலுங்கானாவில், பிரதமர் மோடி 60.1%, ராகுல் காந்தி 26.5%, சந்திரபாபு நாயுடு 6.6%  ஆதரவு பெற்றுள்ளனர்.

* ஆந்திராவில், பிரதமர் மோடி 71.8%, ராகுல் காந்தி 17.9%, சந்திரபாபு நாயுடு 7.4% முன்னிலையில் உள்ளனர்.

* மத்தியில் ஆளும் தற்போதைய பாஜக அரசின் செயல்பாட்டில் 61% பேர் திருப்தி அடைந்துள்ளனர், 21% பேர் அதிருப்தியில் உள்ளனர்.

* 53.3% பேர் பிரதமர் மோடியின் பொருளாதார நிர்வாகம் 'மிகவும் சிறப்பாக உள்ளது' என்றும், 20.9% பேர் 'சிறப்பாக இருக்கிறது' என்றும் நம்புகின்றனர்.

* பிரதமர் மோடியின் கீழ் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து 60% பேர் 'மிகவும் மகிழ்ச்சியாக' உள்ளனர்.

* அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் 52.6% பேர் திருப்தி அடைந்துள்ளனர், 28.1% பேர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

* 64% பேர் பிரதமர் மோடியின் வெளியுறவு விவகாரங்களைக் கையாளும் விதம் 'மிகவும் நன்றாக இருக்கிறது' என்றும், 14.5% பேர் 'சிறப்பாக இருக்கிறது' என்றும் நம்புகிறார்கள்.

* 53.8% பேர் மத்திய அரசின் நலத்திட்டங்களில் திருப்தி அடைவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 24.9% பேருக்குத் திருப்தி இல்லை.

சசிதரூரை பாலியல் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற முயன்றவர்... கரன் தாப்பருக்கு ஜெய் ஆனந்த் பதில்

click me!