தூக்கி வீசப்பட்ட 6 வயது சிறுமி பலி.. ஆத்திரத்தில் வாகனத்திற்கு தீ வைப்பு.. ஓட்டுனரை அடித்து கொன்ற பொதுமக்கள்.!

Published : May 15, 2022, 12:53 PM IST
தூக்கி வீசப்பட்ட 6 வயது சிறுமி பலி.. ஆத்திரத்தில் வாகனத்திற்கு தீ வைப்பு.. ஓட்டுனரை அடித்து கொன்ற பொதுமக்கள்.!

சுருக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தை அடுத்த சிராசிங் பகுதியில் நேற்று இரவு வாகனம் ஒன்று 6 வயது சிறுமி பயங்கரமாக மீது மோதியது. இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுமி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வாகனத்தை சிறைபிடித்து தீ வைத்து எரித்தனர். 

6 வயது சிறுமி மீது மோதிய வாகனத்தை தீயிட்டு கொளுத்தி ஓட்டுனரை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தை அடுத்த சிராசிங் பகுதியில் நேற்று இரவு வாகனம் ஒன்று 6 வயது சிறுமி பயங்கரமாக மீது மோதியது. இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுமி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வாகனத்தை சிறைபிடித்து தீ வைத்து எரித்தனர். 

பின்னர், தப்பிக்க முயன்ற வாகன ஓட்டுனரை அடித்து தாக்கி தீயில் தள்ளினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீ காயங்களுடன் வலியால் துடித்து கொண்டிருந்த ஓட்டுனரை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

ஒரு அமைச்சர் கூட வராததால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! சபைக்கு அவமானம் என எதிர்க்கட்சிகள் ஆவேசம்!
2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!