பேஸ்புக்கில் பழக்கம்... பலமுறை உல்லாசம்.... வசமாக சிக்கிய அமைச்சர் மகன்... ஜெய்பூர் விரைந்த டெல்லி போலீஸ்...!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 15, 2022, 10:52 AM IST
பேஸ்புக்கில் பழக்கம்... பலமுறை உல்லாசம்.... வசமாக சிக்கிய அமைச்சர் மகன்... ஜெய்பூர் விரைந்த டெல்லி போலீஸ்...!

சுருக்கம்

கேவலமாக வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆக்கி விடுவதாகவும் மிரட்டினார் என்றும் அந்த பெண் தெரிவித்து இருக்கிறார்.  

15 பேர் அடங்கிய டெல்லி காவல் படையினர்  ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகனை கைது செய்ய ஜெய்பூர் விரைந்துள்ளனர். 23 வயதான பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் அமைச்சர் மகேஷ் ஜோஷி மகன் சிக்கி இருக்கிறார். 

பாதிக்கப்பட்ட 23 வயது பெண் அமைச்சர் மகன் தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து இந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை பல முறை கற்பழித்ததாக தனது புகாரில் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித் ஜோஷியுடன் இந்த பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். அப்போது முதல் இருவரும் பழகி வந்துள்ளனர். 

மிரட்டல்:

இருவரின் முதல் சந்திப்பின் போதே, ரோகித் ஜோஷி தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, தன்னை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு அதனை காண்பித்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்து இருக்கிறார். இதன் பின் ஒருமுறை டெல்லி வந்த ரோகித் ஜோஷி ஓட்டல் ஒன்றில் தன்னை தங்க வைத்ததாகவும், ஓட்டலில் இருவரின் பெயரை கணவன், மனைவி என குறிப்பிட்டு எழுதி திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து இருக்கிறார்.

இதை அடுத்து இருவரும் ஓட்டலில் தங்கி உள்ளனர். அப்போது ரோகித் ஜோஷி மது அருந்திவிட்டு தன்னை துன்புறுத்தி, அடித்து, தன்னை கேவலமாக வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆக்கி விடுவதாகவும் மிரட்டினார் என்றும் அந்த பெண் தெரிவித்து இருக்கிறார். இதோடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தான் கருவுற்று இருந்ததாகவும், அந்த குழந்தையை கருகலைப்பு செய்ய ரோகித் ஜோஷி வற்புறுத்தியதாக அந்த பெண் தெரிவித்து உள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?