திருப்பதி கோவிலில் ஏப்ரலில் ரூ.127 கோடி காணிக்கை.. 99 லட்சம் லட்டு விற்பனை.. தலைமை நிர்வாக அதிகாரி தகவல்..

By Thanalakshmi VFirst Published May 15, 2022, 10:37 AM IST
Highlights

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதத்தில் மட்டும் உண்டியல் மூலம் ரூ.127 கோடி காணிக்கையும் ஆன்லைன் மூலம் ரூ.4.41 கோடி காணிக்கையும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் 99.07 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியான ‘டயல் யுவர் ஈ.ஓ’ எனும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில்  காணொளி வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், தொலைபேசி மூலம் பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி ஒவ்வொன்றாக பதிலளித்தார்.அப்போது பேசியர் அவர், திருப்பதி கோவிலில் சாமானிய பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடந்த மாதத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். 

விஜபி தரிசனம் ரத்து:

அதோடுமட்டுமல்லாமல், வைகுண்டம் வளாகத்தில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், மோர், சிற்றுண்டி, உணவு போன்ற வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. மேலும் விஜபி தரிசனம் செய்யப்பட்ட நாட்களில், கூடுதலாக சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் என்று விளக்கினார். மாற்று திறனாளிகள் மற்றும் வயது மூத்தோர்களும் வழிபாடு செய்யும் வகையில் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  

தியான மண்டபம்:

கோடை காலம் காரணமாக கோவிலின் மாட வீதிகளில் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீவாரி மெட்டு மார்க்கம் சீரமைக்கப்பட்டதாகவும் கூறினார். உண்டியல் பணம் எண்ணும் பராகமணி அரங்கு 18 கோடி ரூபாய் மதிப்பில் விரைவில் கட்டப்படும் என்றும் திருமலையில் பக்தர்களுக்கு தியான மண்டபம் பிரம்மாண்டமாக கட்டப்படும் என்றும் அவர் கூறினார். 

127 கோடி ரூபாய் காணிக்கை:

அலிபிரியில் ரூ.300 கோடியில் சிறுவர்களுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டடுள்ளது என்றார். கடந்த மாதத்தில் மட்டும் உண்டியல் மூலம் ரூ.127 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. ஆன்லைன் மூலம் ரூ.4.41 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. 99.07 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 27.76 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 9.91 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர் என்று கூறினார். 

மேலும் படிக்க: வாக்காளர் அட்டையுடன் அதார் இணைப்பு.. கட்டாயமா..? விரைவில் அறிவிப்பு.. முன்னாள் தேர்தல் கமிஷனர் பேட்டி..

click me!