ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 6 வயது சிறுவன்... மீட்பு பணியில் பலனின்றி பலி!!

By Narendran SFirst Published May 22, 2022, 10:03 PM IST
Highlights

பஞ்சாப்பில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் ஹிருதிக் மீட்பு பணியின் போது உயிரிழந்தார். இதை அடுத்து உயிரிழந்த சிறுவன் ஹிருதிக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவத் மான் இரங்கள் தெரிவித்ததோடு உயிரிழந்த சிறுவன் ஹிருதிக் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

பஞ்சாப்பில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் ஹிருதிக் மீட்பு பணியின் போது உயிரிழந்தார். இதை அடுத்து உயிரிழந்த சிறுவன் ஹிருதிக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவத் மான் இரங்கள் தெரிவித்ததோடு உயிரிழந்த சிறுவன் ஹிருதிக் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கர்தி வாலா என்னும் பகுதியில் ரித்திக் என்னும் 6 வயது சிறுவன் ஹிருத்திக் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனை நாய்கள் துரத்தியதாக கூறப்படுகிறது. இதில் பயந்து போன சிறுவன் அங்கிருந்து ஓடியுள்ளான். அப்போது அங்கு இருந்த ஆழ்துளை கிணற்றில் கால் இடறி விழுந்துள்ளான். சணல் பையால் மூடப்பட்டு இருந்த அந்த ஆழ்துளை கிணற்றை கவனிக்காமல் அதன்மேல் கால் வைத்த சிறுவன் கிணற்றிற்குள் விழுந்தான்.

சுமார் 300 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளை கிணற்றில் நூறு அடி ஆழத்தில் சிறுவன் சிக்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதுக்குறுத்து தகவல் அறிந்தது வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 100 அடி ஆழத்தில் சிக்கித் தவிக்கும் சிறுவனுக்கு முதற்கட்டமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது. ஆனால் மீட்பு பணியின் போது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது. சிறுவனின் பெற்றோர்களும் மீளாத்துயரில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அம்மாநில முதல்வர் பகவத் மான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஹோஷியார்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஹிருத்திக் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். உயிரிழந்த அந்த சிறுவனின் குடும்பத்திற்கு அவன் இழப்பை தாங்குகின்ற வலிமையினை இறைவன் தர வேண்டும்.  சிறுவனின் குடும்பத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது. ஆனால் இந்த துக்க நேரத்தில் அவர்களுடன் நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம். உயிரிழந்த சிறுவன் ஹிருத்திக் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!