கேரளா, மஹாராஷ்டிராவில் வாட் வரி குறைப்பு... அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை!!

Published : May 22, 2022, 07:04 PM ISTUpdated : May 22, 2022, 07:05 PM IST
கேரளா, மஹாராஷ்டிராவில் வாட் வரி குறைப்பு... அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை!!

சுருக்கம்

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது. 

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அந்தந்த மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் 9 ரூபாய் 5 காசுகளும் டீசல் ஒரு லிட்டர் 7 ரூபாயும் குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கேரளாவில் பெட்ரோல் மீதான வாட் வரியில் 2 ரூபாய் 41 காசுகளும், டீசல் மீதான வாட் வரியில் ஒரு ரூபாய் 36 காசுகளும் குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவித்துள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும். இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 8 காசுகளும் டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 44 காசுகளும் குறைத்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து கேரளா மற்றும் மஹாராஷ்டிரா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த விலை குறைப்பு மூலம் மக்கள் நிம்மதியடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு இந்த விலை குறைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!