
பீகாரில் வீட்டில் இருந்த பட்டாசு வெடித்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள குடாய் பாக் கிராமத்தில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் பட்டாசுகள் இருந்துள்ளது. அது எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இதில் வீட்டின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து விழுந்தன. இந்த வெடி விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்காக இதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்... ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை!!
இதை அடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பட்டாசு வெடித்த விபத்தில் இடிந்த வீடு தொழிலதிபர் சபீர் உசைன் என்பவருடையது என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: இனி இரவு நேரத்திலும் தேசிய கொடியைப் பறக்கவிடலாம்.. பழைய உத்தரவை மாற்றி மத்திய அரசு அதிரடி.!
மேலும் வீட்டில் பட்டாசு வெடித்தபோது, வீட்டின் உள்ளே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. வெடி சத்தம் தொடர்ந்து ஒரு மணிநேரம் கேட்டுள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு வெடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.