இனி தேசிய கொடியை இரவு நேரம் உள்பட எல்லா நேரத்திலும் பறக்கவிடும் வகையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளையும் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு 3ஆவது கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தேசிய கொடியேற்றி வைத்துக் கொண்டாடும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேசியக் கொடி பறக்கவிடுவதில் முக்கியமான மாற்றம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: செஸ் ஒலிம்பியாட்டுக்கு எனக்கு அழைப்பிதழ் வரல.. இருந்தாலும்... பெருந்தன்மையாக பேசிய தமிழிசை சவுந்திரராஜன்.!
பழைய விதிப்படி தேசிய கொடியான மூவர்ண கொடியை சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே நாட்டின் தேசிய கொடியை பறக்க விடலாம். சூரியோதயத்துக்கு முன்பாகவும் அஸ்தமனத்துக்குப் பிரகும் தேசியக் கொடியைப் பறக்கவிடுவது தேசிய கொடி அவமதிப்பாகக் கருதப்பட்டது. தற்போது இந்த விதியைத்தான் மத்திய அரசு மாற்றி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதன்படி இரவு நேரம் உட்பட எல்லா நேரங்களிலும் தேசிய கொடியை பறக்க விட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே போல் முன்பு இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட கொடிகளுக்கும், பாலிஸ்டர் துணிகளில் தயாரிக்கப்பட்ட கொடிகளுக்கும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
மேலும் வாசிக்க: இந்திய ராணுவத்தில் வேலை வேண்டுமா? வெளியானது ஆட்சேர்ப்பு அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது புதிய விதியின் படி கையாலோ இயந்திரத்தாலோ காட்டன், பாலிஸ்டர், சில்க் போன்ற துணிகளில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தேசியக் கொடி சட்டம் 2002-இல் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்தத் திருத்தங்களை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் புதிய அறிவிப்புப்படியும் ‘ஹர் கர் திரங்கா’ திட்டத்தின் கீழ் 20 கோடி வீடுகளில் 100 கோடி நாட்டு மக்கள் தேசிய கொடியை ஏற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க: FACT CHECK : ஜனாதிபதிக்கு வணக்கம் சொன்னாரா பிரதமர் மோடி.. ட்விட்டர் சொன்ன உண்மை !