இனி விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு காலம் அவசியமில்லை.. உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..

By Ramya s  |  First Published May 1, 2023, 2:31 PM IST

பரஸ்பர சம்மதம் இருந்தால் விவாகரத்து பெற, 6 மாத கட்டாய காத்திருப்பு காலம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகிறது. எனினும் பரஸ்பரம் சம்மதத்துடன் பிரிய விரும்பும் தம்பதிகள் உடனடியாக விவாகரத்து பெற முடியாது. விவாகரத்து கோரி தம்பதிகள் நீதிமன்றத்தை நாடினால், முதலில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும். அதிலும் அவர்களின் மனம் மாறவில்லை எனில் அவர்கள் கட்டாயம் 6 மாதம் காத்திருக்க வேண்டும். 6 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகே விவாகரத்து வழங்கப்படும். 

இந்நிலையில் உச்சநீதிமன்றம் விவாகரத்து தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் செயல்படுத்தலாம் என்றும் பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து செய்ய 6 மாதங்கள் கட்டாயக் காத்திருப்பு காலத்தை நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : நடுரோட்டில் வேட்டியை கிழித்து மோதிக்கொண்ட பாஜக-இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள்.!அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

நீதிபதி எஸ் கே கவுல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அரசியல் சட்டத்தின் 142 வது பிரிவின் கீழ் உள்ள  அதிகாரங்களைப் பயன்படுத்தி, பரஸ்பர சம்மதத்துடன் பிரியும், தம்பதிகளுக்கு இடையேயான திருமணங்களை குடும்ப நீதிமன்றங்களுக்கு அனுப்பாமல் கலைப்பது தொடர்பான மனுக்களின் தொகுப்பின் மீதான தீர்ப்பை வழங்கியது. 

மேலும் பேசிய நீதிபதிகள் ​​சமூக மாற்றங்கள் ஏற்பட "சிறிது நேரம்" எடுக்கும் என்றும், சில சமயங்களில் சட்டத்தை இயற்றுவது எளிதானது ஆனால் அதை மாற்றுவதற்கு சமூகத்தை வற்புறுத்துவது மிகவும் கடினம் என்றும் கூறினர்.


குடும்பநல நீதிமன்றங்களில் நடக்கும் நீண்ட விசாரணைகளை தவிர்த்து நேரடியாக பரஸ்பர சம்மதம் இருந்தால் விவாகரத்து தர முடியுமா என்பதே வழக்கு. இருப்பினரும், விசாரணையின் போது மீளவே முடியாது திருமண முறிவு காரணமாக திருமணங்களை கலைக்க முடியுமா என்ற பிரச்சனையை பரிசீலிக்க அரசியலமைப்பு பெஞ்ச் முடிவு செய்தது. 

அதன்படி அரசியலமைப்பு சட்டம் 142-வது பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடியும். இதில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. அதாவது தம்பதிகள் விவாகரத்து பெற வேண்டும் என்று பரஸ்பரம் சம்மதம் இருந்தால் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு செல்லாமல், நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெறலாம். இதன் மூலம் 6 மாதம் காத்திருப்பு காலம் அவசியமில்லை.

கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்ற நிலையில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முஸ்லிம் என்றோ இந்து என்றோ இடஒதுக்கீடு வழங்கக்கூடாது; ஏசியாநெட் நேர்காணலில் அமைச்சர் அமித் ஷா அதிரடி பதில்!!

click me!