“நாளை முதல் ATM-களில் ‘50’ ரூபாயும் எடுக்கலாம்" - ரிசர்வ் வங்கி அதிரடி

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 04:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
“நாளை முதல் ATM-களில் ‘50’ ரூபாயும் எடுக்கலாம்" - ரிசர்வ் வங்கி அதிரடி

சுருக்கம்

நாளை முதல் அனைத்து ஏடிஎம்-களிலிருந்து 50 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500, 1000 ரூபாய்  நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 100 ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

நேற்று வங்கிகள் இயங்கவில்லை. அதேபோல், நேற்றும், இன்றும் நாட்டில் உள்ள ஏடிஎம்-கள் செயல்படவில்லை. இதனால் சில்லறை கிடைக்காமல் பொதுமக்கள் கையில் காசிருந்தும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இன்று முதல் வங்கிகளில் பழைய நோட்டுகள் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்கின்றனர்.

இந்நிலையில், நாளை முதல் அனைத்து ஏடிஎம்-களிலிருந்தும் புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். 

அதுமட்டுமின்றி, இதுவரை 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வங்கி ஏடிஎம்-களிலிருந்து எடுக்கப்பட்டு வந்த நிலையில், நாளை முதல் அனைத்து ஏடிஎம்-களிலும் 50 ரூபாய் நோட்டுக்கள் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

Gold Mine : இந்தியாவின் அடுத்த KGF இந்த மாநிலமா? மண்ணுக்கடியில் கொட்டிக்கிடக்கும் 50 டன் தங்கம்!
Amazing Facts: இந்தியாவுக்கு கிழக்கில் இருந்தும் 'மேற்கு வங்கம்' என பெயர் வந்தது எப்படி? சுவாரஸ்யமான தகவல்கள்.!