இந்நிலையில் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தொற்றால் இறந்தவர்களை எரிக்க முடியாமல் திண்டாடும் அளவிற்கு சடலங்கள் குவிந்து வருகின்றன. கொரோனா முதல் அலையை விட 2வது அலையை அதிதீவிரமாக இருப்பதால் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை முறையாக சோப்பு போட்டு கழுவுவது ஆகியன கட்டாயம் என பின்பற்றப்பட வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
undefined
இந்நிலையில் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 25 நகரங்களில் 2 ஆயிரம் மக்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின்படி, நாட்டில் 50% மக்கள் முகக்கவசமே அணிவதில்லை. மீதமுள்ள 50 சதவீத மக்களில், 64 சதவீத மக்கள் வாய் மட்டுமே மூடும் வகையில் முகக்கவசம் அணிகின்றனர். 20 சதவீத மக்கள் மோவாய்க்கு முகக்கவசம் அணிகின்றனர். 2 சதவீத மக்கள் கழுத்துக்கு முகக்கவசம் அணிகின்றனர். மீதமுள்ள 14% பேர் மட்டுமே முறையாக முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் 8 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான தொற்று பாதித்தவர்கல் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவான நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். a