இன்ஸ்டா காதலால் சீரழிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி; 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

By Velmurugan s  |  First Published Apr 25, 2023, 10:33 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், 2 பெண்கள் உள்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்னும் பகுதியைச் சார்ந்தவர் அஜின் சாம். இந்த வாலிபர் இன்ஸ்டாகிராம் வாயிலாக களியக்காவிளை பகுதியைச் சார்ந்த 11ம் வகுப்பு  படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி உள்ளார். மேலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததோடு, கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி களியக்காவிளை பகுதிக்கு வந்த அஜின் சாம் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்து அஜின் சாம் அந்தப் பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 18ம் தேதி அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகே இறக்கி விட்டு விட்டு இவர் சென்றுள்ளார். அதற்குப் பின்னர் இந்த நபரிடமிருந்து எந்த செல்போன் அழைப்புகளும் வராததை தொடர்ந்து சந்தேகமடைந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கூறியுள்ளார். அதைக் கேட்ட வீட்டார் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tap to resize

Latest Videos

தொடர்ந்து இவர்கள் அளித்த புகாரை விசாரணை செய்த காவல் துறையினர் எர்ணாகுளம் காலடி பகுதியை சார்ந்த அஜின் சாம் மற்றும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் நேரத்தில் அவருடன் வந்த அவரது நண்பர்களான அகிலேஷ் பாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா, தினேஷ், ஸ்ருதி, சித்தார்த் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காதலியின் குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கி கொன்ற கொடூரன்... பூனேவில் நிகழ்ந்த பயங்கரம்!!

மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களை வலை வீசி பிடித்து திருமண ஆசை கூறி ஏமாற்றி வரும் கும்பலை சார்ந்தவர்களா? என்றும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கள் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக பெண் நண்பர்களை அழைத்துக்கொண்டு வருவது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களுடன் சிக்கிய பெண்களை பேசி வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி பணம் சம்பாதித்தும் வருகிறன்றனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் படுகொலை; மனைவி, கள்ளக்காதலன் கைது

இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு பாறசாலை காவல் துறையினரால் தொடர்ந்து விசாரணை செய்யப்படும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!