இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார் பிரதமர் மோடி. மத்திய அரசு திட்டடங்கள் மற்றும் பாஜகவின் அடுத்த நகர்வு என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்துள்ளார் பிரதமர் மோடி.
இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலம் கொச்சியில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ரோட்ஷோ நடத்தினார். ஐஎன்எஸ் கருடா கடற்படை விமான நிலையத்தில் இருந்து இளைஞர்கள் மாநாடு நடைபெறும் இடம் வரையிலான 2 கிமீ பாதையின் இருபுறமும் இருந்த மக்களை நோக்கி கேரள பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி கை அசைத்தார்.
பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு மேல் கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கினார். அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருந்தது. பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த பிறகு, அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் அவரைப் பின்தொடர்ந்த எஸ்யூவிக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், "யுவம் 2023" இல் உரையாற்றிய பிரதமர் மோடி, கேரளாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெரிய உள்கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து பேசினார். "முந்தைய அரசுகள் ஒவ்வொரு துறையிலும் ஊழலில் ஈடுபட்டிருந்தபோது, பாஜக அரசு ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்பதன் மூலம், உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கிறோம்.
நாங்கள் இளைஞர்களுக்கு விண்வெளி மற்றும் பாதுகாப்பில் வாய்ப்புகளை வழங்குகிறோம். நாட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது" என்று மோடி பேசினார். பிரதமர் மோடியின் கேரளா சுற்றுப்பயணம் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கேரள பாஜகவில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிது. கடந்த சில மாதங்களாக, பாஜக கேரளாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
பல உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்லாமல், மாநிலத்தின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமூகத்தினரையும் ஈர்க்க்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஈஸ்டர் மற்றும் ஈத் பண்டிகையின் போது கட்சித் தலைவர்கள் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் வீடுகளுக்குச் சென்ற பி.ஜே.பியின் அவுட்ரீச் திட்டமான "சினேக யாத்ரா"வின் ஒரு பகுதியாக நேற்று கிறிஸ்துவ பாதிரியர்களை சந்தித்தார் பிரதமர் மோடி.
ஏப்ரல் 14-ம் தேதி கேரள புத்தாண்டு தினமான விஷூ அன்று, கேரளாவில் உள்ள பாஜக தலைவர்கள் பிஷப்புகளுக்கும் பிற தேவாலயத் தலைவர்களுக்கும் காலை உணவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (ஏப்ரல் 25) வந்தே பாரத் திட்டத்தை தொடங்க உள்ளார். நாட்டின் முதல் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்
ரூ.1,500 கோடி திட்டமானது டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் பல்துறைக் கிளஸ்டர் அடிப்படையிலான ஊடாடும்-புதுமை மண்டலமாக இருக்கும் இது, இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 12.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது, ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
கேரளாவில் பாரம்பரியமாக கிறிஸ்தவக் கட்சியாகக் கருதப்படும் கேரள காங்கிரஸ் பலவீனமடைந்து வருவதால் பாஜக ஒரு அரசியல் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஐக்கிய ஜனநாயக முன்னணியின் பத்தனம்திட்டா முன்னாள் தலைவர் விக்டர் தாமஸ் நேற்று கேரள காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..கடைசி நேரத்தில் ரத்து.. பிடிஆருக்கு நோ சொன்ன முதல்வர் - உண்மையை போட்டு உடைத்த சவுக்கு சங்கர்.!