பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. தந்தை பாஸ், மகன் பெயில்..!

By Kevin KaarkiFirst Published Jun 19, 2022, 11:59 AM IST
Highlights

குடும்ப சூழல் காரணமாக பள்ளி படிப்பை நிறுத்திக் கொண்ட பாஸ்கர் வாக்மர் மீண்டும் பள்ளி கல்வியை தொடர முடிவு செய்தார்.

43 வயதான நபர் தனது மகன் உடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வில் 43 வயதான நபர் தேர்ச்சி பெற்ற நிலையில், மகன் தோல்வியடைந்து இருக்கிறார். தேர்வு முடிவுகளை பார்த்த குடும்பத்தார் மகிழ்ச்சி அடைவதா அல்லது கவலை கொள்வதா என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து போயினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பத்தாம் வகுப்பு மற்றும் உயர் நிலை பள்ளி தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக் கிழமை அறிவிக்கப்பட்டது. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் போது குடும்ப சூழல் காரணமாக பள்ளி படிப்பை நிறுத்திக் கொண்ட பாஸ்கர் வாக்மர் மீண்டும் பள்ளி கல்வியை தொடர முடிவு செய்தார். அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வை எழுத விண்ணப்பித்தார். இவர் மட்டும் இன்றி இவரின் மகனும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார்.

நீண்ட நாள் ஆசை:

சுமார் முப்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்து கொணட பாஸ்கர் தேர்ச்சி பெற்று இருக்கிறார். “எனக்கு அதிகம் படிக்க வேண்டும் என்றும் துவக்கம் முதலே ஆர்வம் அதிகம் ஆகும். ஆனால் குடும்ப சூழல் காரணமாக என்னால் படிப்பை தொடர முடியவில்லை. சமீப காலங்களில் கல்வியை தொடர முடிவு செய்யலாமா என யோசனை செய்து வந்தேன். அதன்படி பத்தாம் வகுப்பு முடித்து ஏதேனும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றால், வருமானத்தை அதிகப்படுத்தும் என நினைத்தேன். இதன் காரணமாக தான் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். எனது மகனும் இதே ஆண்டு தான் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டான். இது எனக்கு உதவியாக இருந்தது,” என அவர் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பாஸ்கர் வாக்மர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே நகரில் உள்ள பாபாசாகேப் அமேபேத்கர் டியாஸ் பிளாட்டில் வசித்து வருகிறார். தினமும் பணி நேரம் முடிந்த பின் தேர்வுக்காக படித்துக் கொண்டு இருந்து உள்ளார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதில் மகிழ்ச்சி அடைந்த போதிலும், தனது மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். 

மகனுக்கு ஆதரவு:

“என் மகன் துணை தேர்வில் கலந்து கொள்ள அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பேன். அவன் நிச்சயம் தேர்வில் தேர்ச்சி பெறுவான் என நம்புகிறேன்,”  என பாஸ்கர் வாக்மர் தெரிவித்தார். பாஸ்கரின் மகன் சாஹில் தனது மனநிலை சீராக இல்லை என தெரிவித்தார்.

“என் தந்தை தான், எப்போதும் செய்ய முற்பட்டதை செய்து முடித்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனாலும், நான் விட மாட்டேன். துணை தேர்வுகளுக்கு தயாராகி, தோல்வி அடைந்த பரீட்சைகளில் நிச்சயம் தேர்ச்சி பெறுவேன்,” என்று அவர் தெரிவித்தார். 

click me!