தந்தை தற்கொலை செய்ததை செல்போனில் வீடியோ எடுத்த 4 வயது மகன்.. அதிர்ச்சி சம்பவம்

Published : May 27, 2023, 09:48 AM ISTUpdated : May 27, 2023, 09:55 AM IST
தந்தை தற்கொலை செய்ததை செல்போனில் வீடியோ எடுத்த 4 வயது மகன்.. அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

ஆந்திராவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவரின் தங்கை காவல்துறையில் அளித்த புகாருக்கு பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உயிரிழந்தவர் ஷேக் ஜமால் என்பது தெரியவந்துள்ளது. அவர் தனது 3 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : மாறி மாறி புகார்.! ஐ.டி. அதிகாரிகள், திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்த கரூர் போலீஸ்..!

அவரின் மனைவி குவைத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. ஷேக் ஜமால் நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக அவரின் சகோதரி தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு முன்பு அவரின் தந்தை மாதர் சாஹேப் உயிரிழந்ததில் இருந்து அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஷேக் ஜமால் தனது மகனை அழைத்து, தான் தூக்கில் தொங்குவதை செல்போனில் படமாக்கும் படி கூறியுள்ளார். அவர் கூறியபடியே4 வயது மகனும் தந்தை தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்து செல்ல, இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதையும் படிங்க : தேனியில் வாலிபர் அச்சாணியால் குத்தி கொலை; 6 பேர் கைது 3 பேருக்கு வலை

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!