கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் 31 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு.. என்னென்ன அறிகுறிகள்?

By Ramya s  |  First Published Feb 3, 2024, 8:45 AM IST

கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் 31 குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 


கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 31 குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களில், 12 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் காய்ச்சல் பாதிக்க்கப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் தீவிரமான பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறியுள்ளனர். பெரும்பாலான  பாதிப்புகள் சித்தாபூர் தாலுக்காவில் பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

சனாதனம் குறித்த சர்ச்சை கருத்து.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கர்நாடக நீதிமன்றம் சம்மன் - முழு விவரம் இதோ!

குரங்கு காய்ச்சலின் முதல் பாதிப்பு ஜனவரி 16 அன்று பதிவாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, பொதுவாக குரங்குகளில் உயிர்வாழும் உண்ணிகள் கடித்தால் குரங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த உண்ணி மனிதர்களை கடிப்பதன் மூலம், தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. உண்ணி கடித்த கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதாலும் மனிதர்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் இந்த நோய் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் வீடு வீடாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். வனப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உத்தர கன்னடா மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் நீரஜ் பி பேசிய போது “ குரங்கு காய்ச்சல் ஏற்பட்டால், அடுத்த மூன்று முதல் ஐந்து நாட்களில் அதிக காய்ச்சல், கடுமையான உடல்வலி, தலைவலி, கண் சிவத்தல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் "வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாவட்டத்தில் 31 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. இதுவரை, நாங்கள் எந்த தீவிரமான பாதிப்பும் பதிவாகவில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. எங்கள் மருத்துவ அதிகாரிகள் மற்றும் களப் பணியாளர்கள் கிராம சபை மற்றும் கிராம பஞ்சாயத்து மட்டத்தில் பல கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

உணவை அவசர அவசரமாக சாப்பிடுகிறீர்களா..? இந்த பிரச்சனைகள் வரலாம் ஜாக்கிரதை..!!

எங்களது அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நோயாளிகளை கையாள்வதற்கான பணியாளர்களும் அதற்கேற்ற வசதிகள் உள்ளன" என்று தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

click me!