தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் ஆடையைக் களைந்து படம் பிடித்த இளைஞர் கைது!

 
Published : Oct 20, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் ஆடையைக் களைந்து படம் பிடித்த இளைஞர் கைது!

சுருக்கம்

3 young people arrested

மும்பையில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் ஆடைகளை களைந்து, புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மும்பை மாநிலம் மலாடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணின் நிர்வாண புகைப்பட ஒன்று அண்மையில் வாட்ஸ் அப்பில் வெளியானது. தூக்கத்தில் இருக்கும் அந்த இளம் பெண்ணுடன் வாலிபர் ஒருவர் நெருக்கமாக அந்த புகைப்படத்தில் இருப்பது போன்ற வெளியாகி உள்ளது. 

இந்த படத்தைப் பார்த்த அந்த இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். புகைப்படத்தில் இருப்பது தன்னுடைய அந்த இளம் பெண்ணின் ஆண் நண்பர் என்று தெரியவந்தது. 

தான் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் எப்படி தனது ஆடைகளை களைந்து நிர்வாணாக படம் பிடித்தார் என்பது அந்த இளம் பெண்ணுக்கு தெரியவில்லை.

இந்த புகைப்படம் வாட்ஸ் அப்பில் பரவிய நிலையில், அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து, ஹிமான்சு ராத்தோடை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண்ணை ஹிமான்சு ராத்தோடு தனது நண்பர்களான பாருக் சேக்டா, சுல்தான் வஜிர் சேக் ஆகியோருடன் ஹூக்கா பார்லர் ஒன்றுக்கு சென்றதாக கூறினார். 

அங்கு ஹூக்கா புகைத்ததில் இளம் பெண்ணுக்கு மயக்கமும், தலைவலியும் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அந்த இளம் பெண்ணை, சுல்தான் வஜிர் சேக்கின் வீட்டுக்கு அழைத்து சென்று, அவரது ஆடைகளை களைந்து தானும் அவருடன் நெருக்கமாக இருப்பது போன்று செல்போனில் படம் பிடித்ததாகவும் ஹிமான்சு கூறினார்.

இந்த புகைப்படம், தோழி ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டது என்றும், அவர் தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுக்கு அந்த புகைப்படத்தை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து பாருக் சேக்டா, சுல்தான் வஜிர் சேக், ஹிமான்சு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தலைமறைவான அவர்களது தோழியையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்