சூப்பர் டான்ஸ் ஆடி தீபாவளி கொண்டாடிய மோடியின் தாயார் !!  97 வயதில் அசத்தல்…

Asianet News Tamil  
Published : Oct 20, 2017, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
சூப்பர் டான்ஸ் ஆடி தீபாவளி கொண்டாடிய மோடியின் தாயார் !!  97 வயதில் அசத்தல்…

சுருக்கம்

modi mummy dance in diwali festivel

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மோடி நடனமாடிய  தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். அவரின் டான்ஸ் சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

தீபாவளிப் பண்டிகை நேற்று முன்தினம் தமிழகத்திலும், நேற்று வட மாநிலங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வட இந்தியர்கள் ஒலு நாள் கழித்துதான் தீபாவளியை கொண்டாடுவார்கள்.

இந்நிலையில்  பிரதமர் நரேந்திர மோடியின் தாயார், ஹீரா பென், தனது வீட்டில் நடனமாடி உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு தற்போது 97 வயதாகிறது. இவ்ர் குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத் சென்ற நரேந்திர மோடி தனது தாயாரை நேரில் சந்தித்து  வாழ்த்துப் பெற்றார்.

இந்நிலையில் மோடியின் தாயார் ஹீரா பென் நேற்று தனது வீட்டில் சூப்பராக டான்ஸ் ஆடி தீபாவளியைக் கொண்டாடியுள்ளார்.

97  வயதிலும் ஹீரா பென் உற்சாகமாக நடனமாடி தீபாவளியை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த  வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
 

 

 

PREV
click me!

Recommended Stories

மாஸ் காட்டும் இந்தியன் ரயில்வே.. 180 கிமீ ஸ்பீடு..! நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் ரெடி
மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!