ரூ.28,000 கோடி அந்நிய முதலீடு விவகாரம்... பைஜு அலுவலகங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை..

By Ramya s  |  First Published Apr 29, 2023, 3:58 PM IST

ரூ.28,000 கோடி வெளிநாட்டு முதலீடு தொடர்பாக பைஜூ அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 


அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) விதிகளின் கீழ் ரவீந்தரன் பைஜு மற்றும் அவரது நிறுவனமான ‘திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட்’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள மூன்று இடங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அதிகாரிகள் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்நிறுவனம் பைஜூஸ் என்ற பெயரில் பிரபலமான ஆன்லைன் கல்வி போர்ட்டலை நடத்துகிறது. பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : ஆசைவார்த்தை கூறி மருத்துவ மாணவி பலமுறை பலாத்காரம்.. கருவை கலைத்த டாக்டர்.. காவல் நிலையத்தில் கதறும் இளம்பெண்

2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 28,000 கோடிக்கு அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது என்பது தெரியவந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது. அந்நிறுவனம் வெளிநாட்டு அதிகார வரம்பிற்கு அனுப்பப்பட்ட தொகை உட்பட விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகள் என்ற பெயரில் சுமார் 944 கோடி ரூபாய் பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 2020-21 நிதியாண்டிலிருந்து நிறுவனம் தனது நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கவில்லை என்றும், கட்டாயக் கணக்குகளைத் தணிக்கை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

பல்வேறு தனியார் நபர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் பைஜூஸ் நிறுவனத்திற்உ எதிரான விசாரணை தொடங்கப்பட்டது. அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் போது, நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தரன் பைஜுவுக்கு பல சம்மன்கள் அனுப்பப்பட்டன, இருப்பினும், அவர் விசாரணையின் போது ஆஜராகவில்லை.

இதனிடையே அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு, பைஜுவின் சட்டக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில் “பெங்களூருவில் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) அதிகாரிகளின் சமீபத்திய வருகை ஃபெமாவின் கீழ் வழக்கமான விசாரணை தொடர்பானது. நாங்கள் அதிகாரிகளுடன் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்தோம். அவர்கள் கோரிய அனைத்து தகவல்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எங்கள் செயல்பாடுகளின் ஒருமைப்பாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை, மேலும் இணக்கம் மற்றும் நெறிமுறைகளின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 

அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் அவர்களிடம் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவோம், மேலும் இந்த விவகாரம் சரியான நேரத்தில் மற்றும் திருப்திகரமான முறையில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர கல்வித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வழியை மாற்றுவதற்கான எங்கள் பணியில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஆன்லைன் மோசடியில் 12 லட்சத்தை இழந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..

click me!