புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் 25 கட்சிகள்

By SG BalanFirst Published May 25, 2023, 8:02 PM IST
Highlights

எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, தமாக உள்பட 25 கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்பேற்க உள்ளன.

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமர் நரேந்திர மோடியால், வரும் 28ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம், திறக்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், பாஜக அந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன் பிரதமர் தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைத் திறந்து வைப்பார் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. குடியரசுத் தலைவர்தான் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குனோ தேசிய பூங்காவில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் இறப்பு! ஒரே வாரத்தில் 3வது முறை!


25 parties will attend inauguration!
While a group of parties led by and including and etc will boycott the inauguration of the new parliament building by the PM on May 28, the following 25 are…

— Rajesh Kalra (@rajeshkalra)

19 எதிர்க்கட்சிகள் பிரதமர் புதிய நாடாளுமன்றத்தை எதிர்த்தும், குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காததைக்  திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகளின் புறக்கணப்புக்கு ஆளும் கட்சியான பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தக் கட்சிகள் தவிர 25 கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்பேற்க உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, தமாக ஆகிய கட்சிகளும் இவற்றில் உள்ளன. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள 18 கட்சிகளும், கூட்டணியில் இல்லாத 7 எதிர்க்கட்சிகளும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மே 26, 2014 அன்று பிரதமராகப் பதவியேற்றார். தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் 1,224 எம்பிக்கள் தங்கும் வசதி உள்ளது. இது உணவகம், வாகன நிறுத்துமிடம், பெரிய அரசியலமைப்பு மண்டபம் எனப் பல பகுதிகளைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உள்ள ஊழியர்கள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) மூலம் வடிவமைக்கப்பட்ட புதிய சீருடையை அணிந்து பணியாற்றுவார்கள்.

புதிய கட்டமைப்பில் மூன்று வாசல்கள் உள்ளன. அவை கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என்று அழைக்கப்பட்டுகின்றன. மேலும் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி வாயிலகள் உள்ளன.

இரவில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் போர் விமானத்தை தரையிறக்கி இந்திய கடற்படை சாதனை

click me!