மக்களவைத் தேர்தல் முடிவுகள்: திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூ வெற்றி!

By Manikanda Prabu  |  First Published Jun 4, 2024, 8:41 AM IST

Rajeev Chandrasekhar vs Shashi Tharoor : கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சிட்டிங் எம்.பி. சசி தரூரை பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் தோற்கடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது


2024 Kerala Assembly Election Results :  நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் 8.30 மணிக்கு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சிட்டிங் எம்.பி. சசி தரூரை பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் தோற்கடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி. சசி தரூரும், பாஜக சார்பாக ராஜீவ் சந்திர சேகரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பாக பன்யன் ரவீந்திரனும் களம் காண்கின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

2024 Lok Sabha Election Results Live Updates | மக்களவைத் தேர்தல் 2024 - பாஜக முன்னிலை!! ...

திருவனந்தபுரம் தொகுதியை காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே கவுரவப்போட்டியாக கருதுகிறது. மத்திய இணையமைச்சராக இருக்கும் ராஜீவ் சந்திரசேகருக்கு இது முதல் மக்களவைத் தேர்தல். சிட்டிங் எம்,பி.யான சசி தரூர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியை தன் வசம் வைத்துள்ளார். அவருக்கு அங்கு தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளது.

எனவே, 2024 தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி மிகவும் எதிர்பார்ப்புகு உள்ளாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூ வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் 4ஆவது முறையாக திருவனந்தபுரம் எம்.பி.யாக அவர் தேர்வாகவுள்ளார்.

கடந்த 2009 தேர்தலில், சசி தரூர் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும், 2014 ஆம் ஆண்டில், பாஜக வேட்பாளர் ராஜகோபால் சசி தரூருக்கு கடுமையான சவாலாக இருந்தார். இதனால், அந்த தேர்தலில் அவர் 15,470 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். ஆனாலும், 2019 தேர்தலில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சசி தரூர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கும்மனம் ராஜசேகரன் சுமார் 3.16 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!