முன்னாள் பிரம்மோஸ் Airforce பொறியாளர்.. பாக். ISIக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு - ஆயுள் தண்டனை விதிப்பு!

By Ansgar R  |  First Published Jun 3, 2024, 4:13 PM IST

Nishant Agarwal : பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரம்மோஸ் விண்வெளித்துறையின் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு நாக்பூர் நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.


ஒரு வழக்கின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ சார்பாக உளவு பார்த்ததற்காக கூறிய குற்றச்சாட்டில், முன்னாள் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாக்பூர் நீதிமன்றம் திங்கள்கிழமை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2018ம் ஆண்டு பிடிபட்ட அகர்வால், பிரம்மோஸ் ஏவுகணை குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவுத்துறைக்கு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். DRDO மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyenia ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸில் சிஸ்டம் இன்ஜினியராக அவர் ஒரு மூத்த பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

undefined

இனி ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்.. அப்ப புதிய தலைநகரம் எது? அங்கு என்ன சிக்கல்?

இது இந்தியாவின் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது என்பது அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று, இது நிலம், வான், கடல் மற்றும் நீருக்கடியில் உள்ள தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸைப் பாதித்த முதல் உளவு ஊழலாக கடந்த 2018ம் ஆண்டு பதிவான இந்த வழக்கு பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் உளவுத்துறை முகவர்களால் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டதாக நம்பப்படும் நேஹா ஷர்மா மற்றும் பூஜா ரஞ்சன் ஆகிய இரண்டு முகநூல் சுயவிவரங்கள் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் அகர்வால் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இளம் விஞ்ஞானிகள் விருதைப் பெற்ற நிஷாந்த் அகர்வால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது அவருடைய சகாக்களுக்கே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமையான பொறியியலாளராகக் கருதப்படும் அகர்வால், குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயின்ற்றுள்ளார். 

பஞ்சாப் அருகே பெரும் ரயில் விபத்து.. ஜூன் 2 ஒடிசா ரயில் விபத்து.. அதே நாளில் நடந்த மற்றொரு துயரம்..

click me!