ஸ்வீட் எடு, கொண்டாடு!.. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே கொண்டாட்டத்துக்கு தயாரான பாஜக, காங்கிரஸ்.. அடேங்கப்பா!

By Raghupati R  |  First Published Jun 4, 2024, 8:37 AM IST

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ள நிலையில், லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், பாஜக  மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கட்சி அலுவலகங்களில் இப்போதே கொண்டாட்டங்களை துவக்கியுள்ளனர்.


2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், ஓட்டு எண்ணிக்கை துவங்கும் போதே, பாஜகவும், காங்கிரசும், அந்தந்த கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டங்களை துவக்கி விட்டன. டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக வெற்றியை முன்னிட்டு பூரி மற்றும் லட்டுகள் மொத்தமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைமையகத்தில் சோலே பத்தூர் தயாரிக்கும் நிகழ்வும் காணப்படுகிறது என்றே சொல்லலாம்.

லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என, நாட்டிலுள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கணித்ததையடுத்து, மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கையில் உள்ளது. எக்சிட் போல முன்வைக்கப்பட்ட சாத்தியமான எண்களை ஏற்க மறுத்த எதிர்கட்சியான இந்தியா கூட்டணி அதிகாரப்பூர்வ முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று வாதிட்டது.

Tap to resize

Latest Videos

undefined

மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற்றன. ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 272 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Thiruma: சிதம்பரம் தொகுதியில் மீண்டும் வாகை சூடுவாரா திருமாவளவன்.?முன்னிலை நிலவரம் என்ன.?லேட்டஸ்ட் அப்டேட் இதோ

click me!