ஆந்திர முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஜெகன் மோகன்.. ஆட்சியமைக்க தயாராகும் சந்திரபாபு நாயுடு..

By Ramya s  |  First Published Jun 4, 2024, 9:00 AM IST

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.


நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. மேலும் ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேச மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது, இதில் 80.66 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி ஆந்திரப் பிரதேச மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ள நிலையில், அங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சியை தக்க வைப்பாரா அல்லது தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்பது இன்று தெரியவரும். 

Latest Videos

undefined

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: திருவனந்தபுரத்தில் சசி தரூரை தோற்கடிப்பாரா ராஜீவ் சந்திரசேகர்?

ஆந்திராவில் மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 160 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு கணித்துள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சந்திரபாபு . ஆந்திரப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க  88 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

இந்த ஆண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

ஆந்திர பிரதேச மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 8.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 25 தொகுதிகளில், என்.டி.ஏ கூட்டனி 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, ஒய்.எஸ்.2 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 1 இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்வீட் எடு, கொண்டாடு!.. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே கொண்டாட்டத்துக்கு தயாரான பாஜக, காங்கிரஸ்.. அடேங்கப்பா!

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காலை முதலே தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி தற்போது தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி 137 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 133 இடங்களிலும், ஜன சேனா 7 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 15 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் ஆந்திராவில் பெரும்பான் பலத்துடன் ஆட்சியை கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம்.

சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று கட்சி அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சித் தலைமையகத்தில் ஏற்கனவே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இன்று மாலை ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அவர் இன்று ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார்.

2019 தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 151 இடங்களையும், 25 மக்களவைத் தொகுதிகளில் 22 இடங்களையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!