மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்களின் ஆடைகளை அவிழ்த்தும், இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கியும் உள்ளனர். மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள பக்குவஹாட் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இங்கு வாரச்சந்தை நடைபெறும். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படும் இந்த சூழலில் சந்தையில் பிக்பாக்கெட் அடித்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாக தாக்குகின்றனர். மேலும் அவர்களின் ஆடைகளை அவிழ்த்தும், காலணிகளை கொண்டும் சரமாரியாக தாக்குவதையும் பார்க்க முடிகிறது.
This is not . This is Malda in Mamata’s . pic.twitter.com/kgAX37sQa9
— Abhijit Majumder (@abhijitmajumder)
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பெண்களும் மாணிக்கச்சாக்கில் வசிப்பவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. இதற்கிடையில், இவ்வளவு நேரம் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியும் போலீசார் வராதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் பல்வேறு தரப்பிலும் இருந்தும் எழத் தொடங்கி உள்ளது.
முன்னதாக மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டிற்கே மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதே போல் மேங்குவங்க மாநிலத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் ஒரு பெண் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். ஹவுரா மாவட்டத்தில் உள்ள பஞ்சலா பகுதியில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 40 பேர் தன்னை தாக்கியதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். மேலும், திரிணாமுல் கட்சியினர் தனது ஆடைகளைக் கிழித்து, நிர்வாணமாக்கி, கிராமம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச்சென்றதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார். இப்படி நாடு முழுவதும் பெண்கள் மீதான கொடூர தாக்குதல் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மீண்டும் மேற்குவங்கி மாநிலத்தில் 2 பெண்கள் நிர்வாணக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெந்து தணியாத மணிப்பூர்.. வன்முறை தொடர்பாக 6,000 வழக்குகள் பதிவு.. அரசு சொன்ன முக்கிய தகவல்