உத்தரகாண்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்சாரம் பாய்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு!!

Published : Jul 19, 2023, 02:45 PM ISTUpdated : Jul 19, 2023, 02:46 PM IST
உத்தரகாண்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து மின்சாரம் பாய்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு!!

சுருக்கம்

சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றில் நமாமி கங்கை திட்டம் நடைபெறும் இடத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதில் மின்சாரம் பயந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் லக்நந்தா ஆற்றில் நமாமி கங்கை திட்டப் பணிகள்  நடந்து வருகிறது. இங்கு டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து சிதறியது. இதில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒரு போலீஸ்காரர், ஐந்து பாதுகாவலர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து உத்தரகாண்ட் போலீஸ் ஏடிஜிபி வி. முருகேசன் கூறுகையில், ''இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் கம்பிகளின் மீது மின்சாரம் பாய்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், விசாரணையில் எதனால் விபத்து ஏற்பட்டது என்ற முழு விவரமும் தெரிய வரும்'' என்று தெரிவித்துள்ளார்.

பழங்குடியின இளைஞரை தாக்கி, வாயில் சிறுநீர் அடித்த கொடூரக் கும்பல்.. மற்றொரு அதிர்ச்சி சம்பவம்..

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ''இது ஒரு சோகமான சம்பவம். மாவட்ட நிர்வாகம், போலீஸ், எஸ்டிஆர்எப் ஆகியவை சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. காயம் அடைந்தவர்கள் ரிஷிகேசில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் மாற்றப்பட்டு வருகின்றனர்'' என்றார். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்கனவே மிக கன மழை பெய்து வருகிறது. மேலும் கன மழை இருக்கும் என்றும், ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. சமோலி, ஹரித்வார், ருத்ரபிரயாக் ஆகிய இடங்கள் ஏற்கனவே கடுமையான தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. லஸ்கர், கான்புர், ரூர்கி ஆகிய கிராமங்கள் உள்பட மொத்தம் 70க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு  வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தாஜ் மஹாலை சூழ்ந்த வெள்ளம்; டெல்லியை மீண்டும் மிரட்டும் யமுனை!!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!