பழுதான கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி., கேமரா தூக்கி எறியப்பட்டனகேரளாவில் பள்ளிகளில் தேங்கிக்கிடக்கும் மின்னணு பொருள்களின் கழிவுகளை அகற்றும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. ஒரே நாளில் 12,500 கிலோ மின்னணு கழிவுகள் அகற்றப்பட்டன.பள்ளிகளில் பயனின்றி தேங்கிக்கிடக்கும் மின்னணு கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் திட்டத்தை கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்தரநாத் தொடங்கி வைத்தார்.கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பான கைட் மற்றும் தூய்மை கேரள கம்பனி ஆகியவை இணைந்து இந்த மின்னணு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டன.பள்ளிகளில் பழுதடைந்து, பயனிற்றி வீணாகி தேங்கிக்கிடக்கும் கணினிகள், மடிக் கணினிகள், மானிட்டர்கள், பிரிண்டர்கள், கேமராக்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட மின்னணு கழிவுகள் இந்த திட்டத்தின் கீழ் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.புதுக்காடு, கோழிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மின் சாதன கழிவுகளை அகற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஒரே நாளில் 12,500 கிலோ மின்னணு கழிவுகள் அகற்றப்பட்டன.இவ்வாறு வீணாகிப்போயுள்ள மின் சாதன கழிவுகளை குப்பை கிடங்குகளில் கொண்டுபோய் குவிப்பதற்கு பதிலாக மறு சுழற்சி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.