கோப்புகளை பார்ப்பதோடு உங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாதீர்கள், களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி புரிந்து கொள்ளுங்கள். சாமானிய மக்களைப் பற்றி சிந்தியுங்கள், வேகமாகச் செயல்படுங்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகத் தேர்வானவர்கள் 80 பேர் நேற்று முன் தினம் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோடு, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி,ஜிதேந்திர சிங், ஸ்மிருதி இராணி, ராஜ்யவர்த்தன் ரத்தோர், அர்ஜூன் மேக்வால், மூத்த அதிகாரிகள், நிர்மேந்திர மிஸ்ர, பி.கே.சின்ஹா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் உடன் வந்தார்.அப்போது பிரதமர் மோடி அவர்களிடம் உரையாற்றியது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று அறிக்கை வௌியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது-ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த பணியை ஒரு கடமையாகச் செய்யக்கூடாது. நாட்டின் நிர்வாகத்தை நேர்மறையான முறையில் மாற்ற இதை ஒரு வாய்ப்பாக நினைத்து பணியாற்ற வேண்டும். புதிய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி,அரசின் அனைத்து பணிகளையும் எளிதாக்க வேண்டும்நாட்டில் உள்ள 100 சதவீதம் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த பகுதிகளை நாட்டின் சராசரி வளர்ச்சிக்கு இணையாக, பல்வேறு துறைகளிலும் உருவாக்க வேண்டும். 2022ம் ஆண்டை மனதில் வைத்து செயல்பட வேண்டும். புதிய இந்தியா திட்டத்தை நனவாக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.அமைச்சர்கள் தங்கள் தொகுதி, கலெக்டர்களுடன் தொடர்பில் தொடர்ந்து இருந்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசின் சில முக்கியத் திட்டங்களை அதிகமாக மக்களிடம் சென்று சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும், சில செயல்திட்டங்கள் மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்கோப்புகளை பார்ப்பதோடு உங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாதீர்கள், களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி புரிந்து கொள்ளுங்கள். சாமானிய மக்களைப் பற்றி சிந்தியுங்கள், வேகமாகச் செயல்படுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.