சொகுசு கார்-டிராக்டர் நேருக்கு நேர் பயங்கர மோதல்..! 11 பேர் ரத்த வெள்ளத்தில் பலி..!

Published : Mar 07, 2020, 01:20 PM ISTUpdated : Mar 07, 2020, 01:24 PM IST
சொகுசு கார்-டிராக்டர் நேருக்கு நேர் பயங்கர மோதல்..! 11 பேர் ரத்த வெள்ளத்தில் பலி..!

சுருக்கம்

அதிவேகத்தில் வந்த காரும் ட்ராக்டரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் சொகுசு கார் சுக்கு நூறாக அப்பளம் போல உடைந்து காரில் பயணம் செய்த அனைவரும் பலியானதாக தகவல்கள் வருகிறது.

பீகார் மாநிலம் முசாபர்பூர்  அருகே கன்ட்டி. இங்கிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே சாலையின் எதிரே டிராக்டர் ஒன்று வந்துள்ளது. அதிவேகத்தில் வந்த காரும் ட்ராக்டரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் சொகுசு கார் சுக்கு நூறாக அப்பளம் போல உடைந்து காரில் பயணம் செய்த அனைவரும் பலியானதாக தகவல்கள் வருகிறது.  விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவலர்கள் மீட்படையினரின் உதவியுடன் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோரவிபத்தில் 11 பேர் பலியாகி இருக்கின்றனர். 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருணாநிதி-அன்பழகன்..! இறப்பிலும் இணை பிரியாத உயிர்த் தோழர்கள்..!

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!