கர்நாடகாவில் கோர விபத்து..! தமிழக பக்தர்கள் 10 பேர் பலி..!

Published : Mar 06, 2020, 10:00 AM IST
கர்நாடகாவில் கோர விபத்து..! தமிழக பக்தர்கள் 10 பேர் பலி..!

சுருக்கம்

நள்ளிரவில் தும்கூர் அருகே  இருக்கும் குனிகல் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையில் பயங்கரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கிறது சீக்கணப்பள்ளி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சிலர் கர்நாடகாவில் இருக்கும் தர்மஸ்தாலா கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதற்காக ஒரு காரில் கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் தும்கூர் அருகே  இருக்கும் குனிகல் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையில் பயங்கரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேர் பலியாகினர். விபத்துக்குள்ளான காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. அதில் பெங்களூரை சேர்ந்த சிலர் பயணம் செய்தனர். அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.

தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

காசி தமிழ் சங்கமம் 4.0: தமிழக விவசாயிகளுக்கு வாரணாசியில் பிரமாண்ட வரவேற்பு
வந்தே மாதரம் சத்தத்தைக் கேட்டு காங்கிரஸ் ஏன் பயந்தது? நாடாளுமன்றத்தில் வரலாற்றை தோலுரித்த மோடி