
நேட்டா அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது போர் தாக்குதலை நடத்த தொடங்கியது. 20 நாட்களை கடந்தும் , ரஷ்யா - உக்ரைன் இடையேயிலான தாக்குதல் குறையாமல் தீவிரமடைந்து வருகிறது. இதனிடயே போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த பலவேறு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்தது.
நேட்டோ அமைப்பு:
ரஷ்யாவின் போர்த்தாக்குதலை கண்டித்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அதன் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்டவற்றை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், மேற்கத்திய நாடுகள் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து ரஷ்யாவும் பதலடி கொடுத்துள்ளது. இவ்வாறு மாறி மாறி விதிக்கப்பட்ட பல்வேறு தடை காரணமாக சர்வேத அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தன் விளைவாக, சமையல் எண்ணெய் விலையும் திடீரென்று பல மடங்கு உயர்ந்து வருகிறது. மேலும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலவற்றின் விலை மேலும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே எண்ணெய் அதிகமாக பயன்படுத்தி, செய்யப்படும் உணவு பொருட்களின் விலை ஓட்டல்களில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உணவு பொருட்களின் விலை உயர்வு:
அந்த கூட்டத்தில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அசைவ உணவுகள், எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் தயாரிக்க அதிக செலவு ஆவதால், உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கூட்டத்தில் முடிவில் பெங்களூருவில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் மாதம் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.விரைவில் தமிழகத்திலும் அனைத்து ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Russia Ukraine War: அடங்க மறுக்கும் புதின் ..இப்ப வரலைனா இனி 10 வருஷம் வர முடியாது..மிரட்டல் விடும் ரஷ்யா..