கால்களை மடக்காமல் கால்விரல்களைத் தொட முடிந்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்...

Asianet News Tamil  
Published : Mar 07, 2018, 02:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
கால்களை மடக்காமல் கால்விரல்களைத் தொட முடிந்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்...

சுருக்கம்

Your heart is healthy if you can touch your toes without touching your feet ...

உலகில் இதய நோயால் ஏராமானோர் மரணத்தை சந்திக்கின்றனர். இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் காரணம்.

 

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா? அதைத் தெரிந்து கொள்ள உதவும் ஓர் எளிய வழி இதோ...

 

சமீபத்திய ஆய்வு ஒன்றில், யாரால் கையால் கால்களை மடக்காமல் கால்விரல்களைத் தொட முடிகிறதோ, அவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

கண்டறியும் முறை

 

முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி, பின் கையால் கால்விரல்களைத் தொட வேண்டும். அப்படி உங்களால் தொட முடிந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.

 

அமெரிக்காவின் வடக்கு டெக்ஸாஸில் மேற்கொண்ட ஆய்வில், 20-83 வயதிற்குட்பட்ட சுமார் 526 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொருவரையும் கால்களை மடக்காமல் கையால் கால்விரல்களைத் தொடுமாறு செய்தனர்.

 

இப்படி ஒவ்வொருவரும் முயலும் போதும், அவர்களது இரத்த அழுத்தம் அளவிடப்பட்டது மற்றும் அவர்களின் தமனி மற்றும் இதயத்தின் செயல்பாடும் கூர்மையாக கண்காணிக்கப்பட்டது.

 

ஆய்வு முடிவு இந்த ஆய்வின் இறுதியில், இதய பிரச்சனைகள் உள்ளவர்களால் கால் விரல்களைத் தொட முடியாமல் இருப்பது தெரிய வந்தது.

 

இந்த முறையால் நேராக அமர்ந்து, கால்விரல்களைத் தொட முடிந்தால், இதயம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

 

ஒருவேளை முடியாவிட்டால், உங்கள் இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது என்றும், இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake