உங்களுக்குத் தெரியுமா? இரத்த குழாயினுள் தேங்கும் கொழுப்பை கரைக்க வெந்தயம் உதவும்...

 
Published : Mar 07, 2018, 02:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
உங்களுக்குத் தெரியுமா? இரத்த குழாயினுள் தேங்கும் கொழுப்பை கரைக்க வெந்தயம் உதவும்...

சுருக்கம்

Do you know Dill helps to dissolve fat in the blood vessel ...

இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது.

 

குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

 

இப்படி இரத்த குழாய்களினுள் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, பல்வேறு உணவுகளும், பானங்களும் உதவுகின்றன. மருந்து மாத்திரைகள் கூட சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆனால் இயற்கை பானங்களும், உணவுகளும் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

 

இப்போது நாம் இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் இயற்கை பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கும் கொழுப்புக்களின் தேக்கத்தைக் கரைக்க உதவும் உணவு வெந்தயம்.

 

வெந்தயம் பெரிதும் உதவியாக இருக்கும். பல்வேறு ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள ஏராளமான நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாகவும் மற்றும் இந்த கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டள்ளது.

 

வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து உண்ணும் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்வதோடு, பித்தநீரின் உற்பத்தியைச் சீர்செய்யும். மேலும் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றச் செய்யும்.

 

முறை 1 : ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து தினமும் இருமுறை குடிக்க வேண்டும்.

 

முறை 2: வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை 1-2 மாதங்கள் தினமும் குடித்து வந்தால், நிச்சயம் இரத்தக் குழாய்கள் சுத்தமாகி, இதயம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி